Published : 22 Jun 2023 08:07 PM
Last Updated : 22 Jun 2023 08:07 PM

மதுரையில் முதல் பறவைகள் பூங்கா! - ஓர் இளைஞரின் அசத்தல் முயற்சி!

மதுரை: உள்ளூர் பறவைகள் முதல் உலகளாவிய பறவைகள் வரை பார்த்து, கொஞ்சி மகிழும் வகையில் மதுரையின் முதல் பறவைகள் பூங்கா சத்திரப்பட்டி அருகே இளைஞர் ஒருவரால் நடத்தப்படுகிறது.

மதுரை மாவட்டம் ஊமச்சி குளத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன்(28). சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.ஏ. படித்துவிட்டு குடிமைப்பணித்தேர்வுக்கு தயாரானார். பின்னர் பெங்களூருவிலுள்ள பன்னாட்டு கல்வி நிறுவனத்தில் பணிக்குச் சென்றார். கரோனா தொற்றால் வேலையைத் துறந்தவர். நிரந்தரமில்லாத வேலை பார்ப்பதைவிட மனதுக்குப் பிடித்த வகையில் ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என நினைத்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழும் வகையில் மதுரையின் முதலாவது பறவைகள் பூங்காவை தொடங்கி மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.

இது குறித்து அர்ஜூன் கூறியதாவது: கடந்த 9 ஆண்டுகளாக பறவைகள், நாய்கள், முயல்கள், வெளிநாட்டு ஆடு ரகங்கள் ஆகியவற்றை வீட்டில் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன். மதுரையில் பொழுதுபோக்க பெ ரிதாக ஒன்றும் இல்லை. இயற்கைச் சூழலுடன் ரம்மியமாக பொழுது போக்கும் வகையில் பறவைகள் பூங்கா அமைக்க முடிவெடுத்தேன்.

இதற்காக, மதுரை சத்திரப்பட்டி கிரீன்வேலி அருகில் 20 சென்ட் நிலத்தை வாட கைக்குப் பிடித்தேன். தற்போது கிராமப்புறச் சூழல் மறைந்து வருகிறது. வீடியோ கேமில் இன்றைய தலைமுறையினர் மூழ்கிவிடுவதால் ஆடு, மாடுகள், கோழிகள், கிராமத்து வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்வதில்லை.

அவர்களுக்கு ஒரு பாடமாகவும், பொழுது போக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பறவைகள் பூங்காவைத் தொடங்கினேன். பூங்காவில் பறவைகள், செல்லப் பிராணிகளை தொட்டுப் பார்த்து ரசிப்பதோடு கொஞ்சி மகிழலாம். அவற்றுக்கு இரையிடலாம். உள்நாட்டு கோழி ரகங்களோடு வெளி நாட்டுக் கோழிகள், இரண்டரை அடி உயரமுள்ள குதிரை, ஆடுகள் உள்ளன.

மேலும் இங்கு 30 பேர் பங்கேற்கும் வகையில் சிறிய அரங்கும் (மினி பார்ட்டி ஹால்) உள்ளது. பிறந்த நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடலாம். அழகர்கோவில் அடிவாரப்பகுதி என்பதால் இயற்கைச் சூழலான தக வமைப்பை வெளிநாட்டுப் பறவை களும் பெற்றுக்கொள்கின்றன. இங்கு வரும் சிறுவர்கள், பெண்கள், குடும்பத்தி னர்கள் மகிழ்ச்சியுடன் குதூகலித்துச் செல்கின்றனர்.

மணமக்கள் போட்டோ, வீடியோ ஷூட் நடத்தலாம். காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்தப் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.30-ம் கட் டணமாக வசூலிக்கப்படுகிறது. மதுரையில் இதுபோன்ற முயற்சியை யாரும் முன்னெடுக்கவில்லை. இதனால், இதுதான் முதல் பறவைகள் பூங்கா. இவ்வாறு அவர் கூறினார்.

பார்த்து ரசிக்கலாம்: ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மத்திய ஆசிய நாட்டுப் பறவைகள், வாத்துகள், புறாக்கள், குட்டை ரக ஆடுகள், முயல்கள், வெளிநாட்டு முள்ளெலிகள், `போலீஸ் கேப்' அணிந்தது போலிருக்கும் போலந்து நாட்டுக் கோழிகள், மெக்சிகன் நாட்டுக் கோழி, சைனீஸ் நாட்டுக்கோழி, அசாம் குட்டை ரக ஆடுகள், கனடா, சீனா நாட்டு ஆடுகளை பார்த்து ரசிக்கலாம்.

பறவையினங்களான காக்கடியல், லவ் பேர்ட்ஸ், ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ், கனூர் (Conure) வகையில் மெருன் டெயில் கனூர், கிரீன்சிக் கனூர், எல்லோசைடட் கனூர், பைனாப்பிள் கனூர் மற்றும் பெரிய வகை கனூர்களான ஜான்டே கனூர், சன்கனூர் ஆகியவற்றையும் ரசித்து மகிழலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x