Published : 19 Jun 2023 04:18 AM
Last Updated : 19 Jun 2023 04:18 AM

ஆசியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர் வசந்த குமாரிக்கு சாதனை விருது

நாகர்கோவில்: ஆசியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநரான கன்னியா குமரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த குமாரிக்கு ஆசிய சாதனை புத்தக சான்றிதழை ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கி கவுரவித்தார்.

இவர் தனது 34-வது வயதில் (30.03.1993 அன்று) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக பணியேற்றார். 24 ஆண்டுகள் அரசு போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றி, 30.04.2017 அன்று பணி ஓய்வு பெற்றார். வசந்தகுமாரி திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம் வழித் தடங்களில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார்.

தனி மனித சாதனையாக ஆசியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் 24 ஆண்டு கால பணியில் எவ்வித விபத்துகளும் ஏற்படுத்தாமல் பணியாற்றிய காரணத்துக்காக சிறந்த ஆசிய சாதனைகள் புத்தகம் விருது வழங்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் நடைபெற்ற கவுரவிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி கலந்துகொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x