அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 ரூபாயில் சிகை அலங்காரம் செய்யும் புதுச்சேரி இளைஞர்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 ரூபாயில் சிகை அலங்காரம் செய்யும் புதுச்சேரி இளைஞர்!
Updated on
1 min read

புதுச்சேரி: சிகைத் திருத்தத்துக்கு மாதந்தோறும் பல நூறுகள் செலவிடுவோர் பலர். அவர்களுக்கு மத்தியில் அரசு பள்ளியில் பயிலும் எளிய குழந்தைகளின் நிலையை எண்ணி, அவர்களுக்கு 10 ரூபாய்க்கு சிகைத் திருத்தம் செய்கிறார் இளைஞர் விஜயரங்கன்.

புதுச்சேரி காமராஜ் சாலையில் சிகைத் திருத்தகம் வைத்திருக்கும் இவர், ஆண்டு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த 10 ரூபாய் சலுகையுடன் சிகைத் திருத்தம் செய்கிறார். "எனக்கு சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கீழ்கூத்தப்பாக்கம் கிராமம். தற்போது புதுச்சேரியில் வசிக்கிறேன்.

முக்கிய பெரிய நிறுவனத்தில் சிகை அலங்கார பணியில் இருந்து, தற்போது புதுச்சேரியில் சிகை அலங்கார கடை வைத்துள்ளேன். எனது கடையில் முடித்திருத்தம் செய்ய பிற கடைகளில் வசூ லிப்பது போலவே வசூலித்தாலும், அரசு பள்ளி யில் படிக்கும் குழந்தைகளுக்கு 10 ரூபாய்தான் வாங்குகிறேன்.

சின்ன வயதில் எனக்கு முடித்திருத்தம் செய்து, அழகாக இருக்க ஆசையாக இருக்கும். அதே ஆசை இக்குழந்தைகளுக்கும் இருக்கும். ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் எளிய மாணவர்களுக்கு அதற்கான பணம் இருக்காது. அதனால்தான் என் னால் ஆன இந்த எளிய முயற்சி. தினமும் காலையில் 7 மணி முதல் 10 மணி வரை இந்த சலுகைக் கட்டணத்தில் அரசு பள்ளி யில் பயிலும் குழந்தைகளுக்கு முடித்திருத்தம் செய்வேன். முன்னதாக எனது எண்ணுக்கு (96557 60034) அழைத்து, முன்பதிவு செய்து கொண்டால் வசதியாக இருக்கும்.

அவர்களுக்கு ஏற்ப எனது பணி நேரத்தை திட்ட மிட்டு, குறிப்பிட்ட நேரத்தை தெரிவித்து விடுவேன்” என்கிறார் விஜயரங்கன். ‘சலுகை விலையில் இப்படி முடி வெட்ட வருவோர், ஏழ்மை நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் தான் என்று எப்படி கண்டறிகிறீர்கள்?’ என்று கேட்டால், “அது ரொம்ப சுலபம்.

அந்தக் குழந்தைகளிடம் அல்லது அவர்களை அழைத்து வரு வோரிடம் பேச்சு கொடுக்கும் போதே அதை கண்டுபிடித்து விடலாம்” என் கிறார். “வாடகை வீட்டில் எனது குடும்பத்தினருடன் மகிழ்ச் சியுடன் இருக்கிறேன். இதுவரை 700 குழந்தைகளுக்கு மேல் இப்படி 10 ரூபாயில் சிகைத் திருத்தம் செய்துள்ளேன். எனது பணியைக் கொண்டு ஏதோ என்னால் ஆன சிறு முயற்சி இது”என்கிறார் விஜயரங்கன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in