

கலவி பற்றி பொதுவெளியில் பேசுவதையே இன்னும் வளர்ந்த நாடுகள் கூட தயங்கும் சூழலில், ஸ்வீடன் நாட்டில் கலவி ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இதை இன்னும் அந்நாட்டு தரப்பில் அதிகாரபூர்வமாக உறுதி செய்த தகவல் ஏதுமில்லை.
அதேபோல் ஸ்வீடனில் வரும் ஜூலை 8-ஆம் தேதி முதன்முறையாக ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி பல வாரங்கள் நடக்கும் என்றும், அன்றாடம் 6 மணி நேரம் நடத்தப்படும் என்றும், பங்கு பெறுபவர்களுக்கு 45 நிமிடங்கள் வழங்கப்படும் என்றெல்லாம் வெளியான தகவல் இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன.
மற்ற விளையாட்டுகளைப் போலவே இந்த விளையாட்டையும் கணக்கிட நடுவர்கள் இருப்பர்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. 16 விதமான போட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எவ்வித பாலின ஈர்ப்பு கொண்டவராக இருந்தாலும் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி இனி எதிர்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாத இந்தியாவின் காமசூத்ரா நூலில் உள்ள நுணுக்கங்கள் பற்றி அறிந்திருக்கும், செயல்படுத்தும் போட்டியாளர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்றும் போட்டி விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸ் என்ற அமைப்பின் தலைவர் ட்ராகன் ப்ராடிச் கூறுகையில், "கலவியை ஒரு விளையாட்டாக அங்கீகரிப்பது சரியானதே. ஏனெனில், அதற்கு நல்ல உடல்நிலையும் மனநிலையும் தேவைப்படுகிறது. சிறப்பான கலவிக்கு கொஞ்சம் பயிற்சியும் தேவைதான். அதனை ஊக்குவிக்கவே இந்தப் போட்டி. அதனால் இந்தப் போட்டியில் பங்கேற்க ஆசைப்படுபவர்கள் கொஞ்சம் பயிற்சி மேற்கொள்வது நல்லது" என்றார்.