ம.பி.யில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் - போலீஸார் சோதனையில் சிக்கிய ரூ.3 கோடி

ம.பி.யில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் - போலீஸார் சோதனையில் சிக்கிய ரூ.3 கோடி
Updated on
1 min read

போபால்: மத்​தி​யப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்​டம், கோபால்​கஞ்ச் காவல் எல்​லைக்கு உட்​பட்ட தீலிதிகட்டா பகு​தி​யைச் சேர்ந்தவர் சவுரப் அகிர்​வார். டாக்ஸி ஓட்​டுந​ரான இவர், கையில் துப்பாக்கியை வைத்​துக்​கொண்டு சமூக வலை​தளத்​தில் ‘ரீல்​ஸ்’ வீடியோ ஒன்றை பதி​விட்​டிருந்​தார்.

இது தொடர்​பாக ரோந்து மற்​றும் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டிருந்த காவல்​துறை​யினருக்​குத் தகவல் கிடைக்​கவே, சட்​ட​விரோத​மாக ஆயுதம் வைத்​திருப்​ப​தாகக் கூறி சவுரப் அகிர்​வாரின் வீட்​டிற்​குச் சென்று அதிரடிச் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

வீட்​டின் அனைத்​துப் பகு​தி​களி​லும் துப்​பாக்​கியைத் தீவிர​மாகத் தேடிய அதி​காரி​களுக்கு முதற்​கட்​ட​மாக எது​வும் கிடைக்கவில்லை. எனினும், அங்​கிருந்த பூட்​டிய பீரோ ஒன்​றைப் பரிசோ​திக்க முயன்​ற​போது, சவுரபின் குடும்​பத்​தினர் சாவியைக் கொடுக்​காமல் தாமதப்​படுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்​து,

சாட்​சிகள் முன்​னிலை​யில் பூட்டை உடைத்த காவல்​துறை​யினர் அதிர்ச்​சி​யடைந்​தனர். பீரோவுக்​குள் சாக்கு மூட்​டைகளி​லும் பெரிய பைகளி​லும் கட்​டு​கட்​டாக அடுக்​கப்​பட்​டிருந்த ரூ. 500, ரூ. 200 நோட்​டு​கள் நிரம்பி வழியக் காணப்​பட்​டன. சோதனை​யின் முடி​வில், பீரோ​வில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த மொத்​தப் பணத்தின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடிக்​கும் அதி​கம் என்​பது தெரியவந்தது.

இவ்​வளவு பெருந்​தொகை எதற்​காகப் பதுக்கி வைக்​கப்​பட்​டது, இதன் பின்​னணி​யில் சட்​ட​விரோதப் பணப்​பரி​மாற்​றம் உள்​ளதா என்​பது குறித்​துக் காவல்​துறை​யினரும் வரு​மான வரித்துறையினரும் தொடர்ந்து தீவிர​மாக வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

ம.பி.யில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் - போலீஸார் சோதனையில் சிக்கிய ரூ.3 கோடி
திருவொற்றியூரில் கொல்லப்பட்ட மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிவாரணம்: பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in