ராகுல் காந்தியை முன்னிறுத்தும் மற்றொரு முயற்சி: டெல்லி போராட்டம் மீது பாஜக விமர்சனம்

ராகுல் காந்தியை முன்னிறுத்தும் மற்றொரு முயற்சி: டெல்லி போராட்டம் மீது பாஜக விமர்சனம்
Updated on: 
1 min read

பதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பேரணியில் ஈடுபட்ட நிலையில், இது ராகுல் காந்தியை அரசியல் ரீதியாக முன்னிறுத்தவதற்கான மற்றொரு முயற்சி என்று பாஜக விமர்சித்துள்ளது.

டெல்லியில் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்களைத் தவறாக மேற்கோள்காட்டி, குழப்பத்தை ஏற்படுத்தவும் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தவம் ராகுல் காந்தி முயல்கிறார்.

தேர்தல் ஆணையம் தொடர்பான பொதுநல மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், படிவம் 6 சட்டவிரோதமானது என்று கூறவில்லை. அது நோட்டீஸ் மட்டுமே அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இன்னும் விசாரணைகூட நடைபெறவில்லை. விசாரணை நடைபெறும்போது இந்த விவகாரம் பரிசீலிக்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறி இருக்கிறார்.

நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், ராகுல் காந்தியை அதிகாரத்தில் அமர்த்துவதற்கும் சில எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஒரு திட்டமிட்ட முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த செயல்முறை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கவில்லை. இது கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்தில் இருந்தே ராகுல் காந்தியை எப்படியாவது முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயன்று வருகிறது. பல முயற்சிகளுக்குப் பிறகும் அவர் மக்களிடம் போதிய வரவேற்பைப் பெறத் தவறிய நிலையில், அராஜகத்தை உருவாக்கியோ, நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்தோ எப்படியாவது அவரை அரசியல் ரீதியாக முன்னுறுத்தியே தீருவது என காங்கிரஸும் அதன் சில கூட்டணி கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விமர்சித்து, வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தியே தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறி வருகிறார். நாட்டில் 61 ஏ சட்டத்தைக் கொண்டு வந்து அதன்மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 1989ல் அறிமுகப்படுத்தியதே ராஜீவ் காந்திதான். முழு அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி 2004ல் தான் முதன்முதலாக தேர்தல் நடைபெற்றது.

திரிபுராவில் சமீபத்தில் நடந்து முடிந்த கிராமக் குழு தேர்தல்களின் முடிவுகள் தறபோது அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு 4,597 இடங்களுக்கு வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 4,320 இடங்களிலும், காஙகிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்குச்சீட்டு முறையிலும்கூட மக்கள் காங்கிரஸை நிராகரித்துவிட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியை முன்னிறுத்தும் மற்றொரு முயற்சி: டெல்லி போராட்டம் மீது பாஜக விமர்சனம்
தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி: ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in