

ஸ்ரீநகர் எம்.பி.ருஹுல்லா மெஹ்தி
ஸ்ரீநகர்: ஈரான் உச்சத் தலைவர் காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இது தொடர்பான செய்திகள், புகைப்படங்களை ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.ருஹுல்லா மெஹ்தி, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணை, பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தாக்கியதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிர்ந்து பொது மக்களை தவறாக வழி நடத்தியதாக மெஹ்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.