பெங்களூருவில் 5-ம் தேதி 7-வது உலக திருக்குறள் மாநாடு: தமிழக அமைச்சர் தென்னரசு பங்கேற்பு

த‌மிழக அயல​கத் தமிழர் நலத்​துறை அமைச்​சர் கே.தென்னரசு

த‌மிழக அயல​கத் தமிழர் நலத்​துறை அமைச்​சர் கே.தென்னரசு

Updated on
1 min read

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள‌ செயிண்ட் ஜோசப் பல்கலைக்​ கழகத்​தில் வரும் 5ம் தேதி 7-வது உலக திருக்​குறள் மாநாடு நடை​பெற உள்​ளது.

இது குறித்து திரு​வள்​ளுவர் சங்க தலை​வர் எஸ்​.டி.கு​மார் பெங்களூரு​வில் நேற்று நடை​பெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் கூறிய​தாவது: செயிண்ட் ஜோசப் பல்​கலைக்​கழகம், தாய்​ மொழி கூட்​டமைப்பு மற்​றும் திரு​வள்​ளுவர் சங்​கம் இணைந்து வரும் 5ம் தேதி 7-வது உலக திருக்​குறள் மாநாட்டை நடத்​துகிறது.

செயிண்ட் ஜோசப் பல்​கலைக்​ கழகத்​தில் நடை​பெறும் இந்த மாநாட்டை த‌மிழக அயல​கத் தமிழர் நலத்​துறை அமைச்​சர் தென்னரசு தொடங்கி வைக்​கிறார்.

இம்​மா​நாட்​டில் இஸ்ரோ முன்​னாள் திட்ட‌ இயக்​குனர் மயில்​சாமி அண்​ணா துரை, கன்னட ரக்சன வேதிகே அமைப்​பின் தலை​வர் நாராயண கவு​டா, செயிண்ட் ஜோசப் பல்​கலைக்​ கழகத்​தின் துணை வேந்​தர் விக்​டர் லோபோ உள்​ளிட்​டோர் பங்கேற்கின்றனர். 20-க்​கும் மேற்​பட்ட ஆய்​வாளர்​கள் திருக்​குறள் தொடர்​பான தங்​களின் ஆய்​வுக் கட்​டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p><em>த‌மிழக அயல​கத் தமிழர் நலத்​துறை அமைச்​சர் கே.தென்னரசு</em></p></div>
மத்திய அரசின் அனைத்து துறை செயலர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in