பெங்களூரு: மைசூரு பட்டுப் புடவைகளை வாங்க அதிகாலை 4 மணிக்கு வரிசையில் நின்ற பெண்கள்

மைசூரு பட்டுப் புடவைகளை வாங்குவதற்காக கடை வாசலில் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

மைசூரு பட்டுப் புடவைகளை வாங்குவதற்காக கடை வாசலில் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்​தின் சார்​பில் விற்​பனை செய்​யப்​படும் மைசூரு பட்​டுப் புட​வை​கள் மிக​வும் பாரம்​பரிய​மானவை. புவி​சார் குறி​யீடு பெற்ற இந்த புட​வை​களுக்கு பெண்​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு நில​வு​கிறது. இதனை வாங்​கு​வதற்​காக கர்​நாட​காவை சேர்ந்​தவர்​கள் மட்​டுமல்​லாமல் பிற மாநிலங்​களை சேர்ந்​தவர்​களும் குவிவ​தால், கடந்த 5 ஆண்​டு​களுக்கு முன்​னர் டோக்​கன் நடை​முறை அறி​முகப்​படுத்​தப்​பட்​டது.

பெங்​களூரு​வில் உள்ள கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்​தின் விற்​பனையகத்​தில் புடவை வாங்​கு​வதற்​காக பெண்​கள், ஆண்​கள் என 500-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று அதி​காலை 4 மணிக்கே வரிசை​யாக அணிவகுத்து நின்​றனர். பெங்​களூரு​வின் கடுங்​குளிரை​யும் பொருட்​படுத்​தாமல் போர்வை போர்த்​திக்​கொண்டு நாற்​காலிகளில் அமர்ந்​த​வாறு நீண்ட நேரம் காத்​திருந்​தனர். கடை​யின் பணி​யாளர்​கள் கூட்​டத்தை கட்​டுப்​படுத்த முடி​யாமல் திணறினர்.

தேர்வு செய்ய முடி​யாது: காலை 10 மணிக்கு கடை திறக்​கப்​பட்​டதும் பட்​டுப் புட​வைக்​கான டோக்​கன் வழங்​கப்​பட்​டது. ரூ.23 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்​சம் வரையி​லான விலை​யில் பட்​டுப் புட​வை​கள் விற்​பனை செய்​யப்​பட்​டன. ஒரு வாடிக்​கை​யாள​ருக்கு ஒரு புடவை மட்​டுமே வழங்​கப்​படும். வாடிக்​கை​யாளர்​கள் தங்​களுக்கு பிடித்​த​மான புட​வை​க‌ளை தேர்வு செய்​வதற்கு அனு​மதி இல்லை என கடை​யின் வாசலில் பதாகை வைக்​கப்​பட்​டிருந்​த‌து. வரிசை​யில் நின்று டோக்​கன் பெற்​றவர்​களுக்கு மட்​டுமே புட​வை​கள் வழங்​கப்​பட்​டன.

மைசூரு பட்​டுப்​புட​வையை வாங்​கிய மென்​பொறி​யாளர் பிரியதர்​ஷினி கூறும்​போது, ‘‘நான் கடந்த 10 ஆண்​டு​களாக மைசூரு பட்​டுப் புட​வை​களை வாங்கி வரு​கிறேன். பழைய​தாக ஆனாலும், உடுத்​தும்​போதெல்​லாம் புதுசு போலவே இருக்​கும். இதனை வாங்​கு​வதற்​காக பட்ட கஷ்டமெல்​லாம் அப்​போது மறந்​து​போய்​ விடும்​'' என்​றார்​.

<div class="paragraphs"><p>மைசூரு பட்டுப் புடவைகளை வாங்குவதற்காக கடை வாசலில் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.</p></div>
கேரள நபர் தற்கொலை: பேருந்தில் வீடியோ எடுத்த பெண் மீது வழக்குப் பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in