‘சூனியக்காரி’ என கிண்டல் செய்யப்பட்ட பெண் ராஜஸ்தான் மாநில அரசு தேர்வில் வெற்றி பெற்று சாதனை!

‘சூனியக்காரி’ என கிண்டல் செய்யப்பட்ட பெண் ராஜஸ்தான் மாநில அரசு தேர்வில் வெற்றி பெற்று சாதனை!
Updated on: 
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தானில் கணவர், மகள் உயி​ரிழந்த நிலை​யில், சூனியக்காரி என கிண்​டல் செய்​யப்​பட்ட பெண் ஒரு​வர் அம்மாநில நிர்​வாக பணித் தேர்​வில் (ஆர்​ஏஎஸ்) வெற்றி பெற்று சாதனை் படைத்​துள்​ளார்.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரைச் சேர்ந்த ரோகினி குர்​ஜர் 2006-ம் ஆண்டு பிஏ பட்​டம் பெற்று தனது கிராம​மான குக்​ரா​வில் பட்​டம் பெற்ற முதல் பெண் என்ற பெரு​மையை பெற்​றார். பின்​னர், அவர், 2011-ல் திரு​மணம் செய்து கொண்​டு, 2013-ல் தாயா​னார். 2021-ல் அவரது கணவர் உயி​ரிழந்​தார். இது ரோகினிக்கு மிகுந்த துயரத்தை ஏற்​படுத்​தி​யது.

ரோகினிக்கு 2 பெண் குழந்​தைகள் பிறந்​த​தால், மாமி​யார் வீட்​டில் அவரை கேலி செய்​ததுடன், அவருக்கு போதிய ஆதரவு கிடைக்​க​வில்​லை.

அத்​துடன், கிராமத்​தில் சிலர் கணவரின் மரணத்​துக்கு ரோகினி​தான் காரணம் என்று குற்​றம்​சாட்​டி, அவரை ‘சூனியக்காரி’ என்று அழைத்​தனர். எனினும், ரோகினி​யின் சகோதரர் நரேந்​திர குர்​ஜரும், கணவரின் பாட்டி புஷ்பா தேவி​யும் அவருக்கு உறு​துணை​யாக இருந்​தனர். ரோகினி மீண்​டும் படிப்பைத் தொடங்க வேண்​டும் என்று பாட்டி புஷ்பா தேவி தொடர்ந்து ஊக்​கப்​படுத்​தி​னார்.

தொடர்ந்து வந்த சோதனை​கள்

இதையடுத்​து, 2021-ம் ஆண்டு ரோகினி போட்​டித் தேர்​வு​களுக்​குத் தயா​ராகத் தொடங்​கி​னார். ரோகினி ராஜஸ்​தான் நிர்​வாகப் பணித்தேர்​வில் (ஆர்​ஏஎஸ்) தனது முதல் முயற்​சி​யில் முதல்​நிலைத் தேர்​வில் வெற்றி பெற்​றார். ஆனால், முதன்​மைத் தேர்​வில் மதிப்பெண் குறைந்ததால் வெற்றி பெறவில்​லை. மீண்​டும் முயற்சி செய்த அவர், 2023-ம் ஆண்டு தேர்​வுக்​குத் தயா​ராக ஜெய்ப்​பூருக்​குச் சென்​றார்.

அப்​போது அவரது பாட்டி புஷ்பா தேவி​யும் உயி​ரிழந்​தார். ஒரு​வழி​யாக அந்த துயரத்​திலிருந்து மீண்​டு, ரோகினி தனது படிப்​பைத் தொடர்ந்​தார். ஆனால், 2024-ம் ஆண்டு அவரது 10 வயது மூத்த மகள் திடீரென உடல்​நலக் குறை​வால் உயி​ரிழந்​தார். இதனால், நிலைகுலைந்து போன ரோகினி ஆர்​ஏஎஸ் முதன்​மைத் தேர்வை மீண்​டும் எழுத வேண்​டாம் என்று முடிவு செய்​தார். ஆனால், அவரது குடும்​பத்​தினர், குறிப்​பாக, அவரது இளைய மகள் பூமிக்​காக​வாவது தேர்வை எழுத வேண்​டும் என்று அவரை சமா​தானப்​படுத்​தினர்.

தேர்​வுக்கு முன்பு விபத்து

இதற்​கிடையே, ஆர்​ஏஎஸ் முதன்​மைத் தேர்​வுக்கு 2 நாட்​களுக்கு முன்பு ரோகினி விபத்​தில் சிக்​கி​னார். இதில் அவரது கண் கடுமையாக காயமடைந்​தது. ஒரு கண்​ணில் கட்​டுப் போடப்பட்டிருந்த நிலை​யில், மற்​றொரு கண்​ணின் உதவி​யுடன் தேர்வு எழு​தி​னார். 2024-ம் ஆண்டு ஆர்​ஏஎஸ் தேர்​வில் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் விதவைப் பிரி​வில் 2-ம் இடம் பிடித்​தார். அவருக்கு ராஜஸ்​தான் கணக்​கு பணித்​துறை ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. அந்த வி​டா​முயற்சி இறு​தி​யில் அவரை ஆர்​ஏஎஸ் தேர்​வின்​ வெற்றிக்​ கோட்​டை கடக்கச்​ செய்​தது.

‘சூனியக்காரி’ என கிண்டல் செய்யப்பட்ட பெண் ராஜஸ்தான் மாநில அரசு தேர்வில் வெற்றி பெற்று சாதனை!
சென்ட்ரல் பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் திருடனை விரட்டிப் பிடித்த சிறுவன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in