‘உயர்​நிலை வி​சா​ரணை தேவை’ - விமான பணிப்பெண்ணின் தந்தை வேண்டுகோள்

‘உயர்​நிலை வி​சா​ரணை தேவை’ - விமான பணிப்பெண்ணின் தந்தை வேண்டுகோள்
Updated on
1 min read

மும்பை: மகா​ராஷ்டி​ரா​வின் தானே பகு​தியை சேர்ந்த விமான பணிப்​பெண் பிங்கி (29) விமான விபத்​தில் உயி​ரிழந்​தார். அவரது உடல் நேற்று மும்​பைக்கு கொண்டு வரப்​பட்​டது. மும்பை சிவாஜி​பார்க் மயானத்​தில் அவரது உடல் நேற்று தகனம் செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து பிங்​கி​யின் தந்தை சிவகு​மார் கூறும்​போது, “எனது மகள் கடந்த 5 ஆண்​டு​களாக விமான பணிப் ​பெண்​ணாக பணியாற்றினார். 3 ஆண்​டுக்கு முன்பு அவருக்கு திரு​மணம் நடைபெற்​றது. கணவன், மனைவி மும்​பை​யில் தங்​கி​யிருந்து பணியாற்றினார்.

விமான விபத்​தில் எனது மகளை பறி​கொடுத்​து​விட்​டேன். இந்த விபத்​துக்​கான காரணம் குறித்து உயர்​நிலை வி​சா​ரணை நடத்​த வேண்​டும்" என்​று தெரி​வித்​தார்​.

விமான விபத்​தில் உயி​ரிழந்த அஜித் பவாரின் பாது​காப்பு அதி​காரி விதிப் ஜாத​வின் உடல் மகா​ராஷ்டி​ரா​வின் சதாரா மாவட்​டம், தாரட்கோன் கிராமத்​துக்கு கொண்டு வரப்பட்டு நேற்று தகனம் செய்யப்​பட்​டது.

‘உயர்​நிலை வி​சா​ரணை தேவை’ - விமான பணிப்பெண்ணின் தந்தை வேண்டுகோள்
காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்: இத்தாலி பல்கலைக்கழகத்துடன் கோத்தாரி நிறுவனம் ஒப்பந்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in