மேற்கு வங்க தேர்தல் தோல்வியின் தாக்கம்: காங்கிரஸுடன் ஐக்கியமாகும் திரிணமூல், என்சிபி கட்சிகள்?

மேற்கு வங்க தேர்தல் தோல்வியின் தாக்கம்: காங்கிரஸுடன் ஐக்கியமாகும் திரிணமூல், என்சிபி கட்சிகள்?
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்​சி) 80 எம்​எல்​ஏக்​களில் 58, மக்​களவை​யின் 29 எம்​.பி.க்​களில் 20 பேர் மற்​றும் மாநிலங்​களவை​யின் 13 எம்​.பி.க்​களில் 4 பேர் மம்​தாவுக்கு எதி​ராகக் கிளம்பி உள்​ளனர்.

இதை சமாளிக்க காங்​கிரஸ் கட்​சி​யில் மீண்​டும் ஐக்​கிய​மாவது குறித்து மம்தா யோசனை செய்து வரு​கிறார். கடந்த வாரம் டெல்​லி​யில் நடை​பெற்ற இண்​டியா கூட்​டணி கூட்​டத்​தில் மம்தா பங்​கேற்​றார்.

இதற்கு முன்பு நடை​பெற்ற இண்​டியா கூட்​டணி நடவடிக்​கை​களில் ஆர்​வம் காட்​டாத மம்​தா, இந்த முறை பங்​கேற்​றது சுய​லாபத்​துக்காகத்​தான் என்ற விமர்​சனம் எழுந்​தது.

எனினும், டெல்​லி​யிலேயே தங்கி காங்​கிரஸ் தலை​வர்​கள் சோனி​யா, ராகுல் மற்​றும் கார்கே ஆகியோரை மம்தா சந்​தித்து பேசி​னார். மம்​தாவுடன் அபிஷேக் பானர்​ஜி​யும் கலந்து கொண்​டார்.

இதேபோல், காங்​கிரஸில் இருந்து வெளி​யேறி தேசி​ய​வாதக் காங்​கிரஸ் கட்சி தொடங்​கிய சரத்​ப​வார், மீண்​டும் தாய் கட்​சிக்கு திரும்​பத் திட்​ட​மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய அளவில் எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​ட​ணியை வலுப்​படுத்த வேண்​டும் என்ற குரல்​களும் எழுந்​துள்​ளன. அதற்​காக, தமிழ்​நாட்​டில் ஆட்​சி​யை இழந்​த தி​முகவை​யும்​ இண்​டி​யா கூட்​ட​ணி​யில்​ மீண்​டும்​ இழுக்​க எதிர்க்கட்சித் தலைவர்கள் முயற்​சி செய்து வருகின்றனர்.

மேற்கு வங்க தேர்தல் தோல்வியின் தாக்கம்: காங்கிரஸுடன் ஐக்கியமாகும் திரிணமூல், என்சிபி கட்சிகள்?
பயிர்க்கடன் தள்ளுபடி கோரி அதிமுக சார்பில் விழுப்புரத்தில் 16-ல் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in