

புதுடெல்லி: ஹைரேஞ்ச் கிராமப்புற மேம்பாட்டு சங்கம் (எச்ஆர்டிஎஸ்), 2025-ம் ஆண்டுக்கான வீர சாவர்க்கர் சர்வதேச விருதுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பெயரை அறிவித்தது.
காங்கிரஸ் தலைமைக்கும் சசி தரூருக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு இருந்துவரும் சூழலில் இவ்விருதுக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விருது தொடர்பான ஒரு கேள்விக்கு ‘‘நான் அந்த விழாவுக்கு செல்லவில்லை’’ என சசி தரூர் பதில் அளித்தார்.
பின்னர் ‘எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “விருதின் தன்மை, அதை வழங்கும் அமைப்பு தொடர்பான எந்த விவரமும் இல்லாத நிலையில், அந்த விழாவில் கலந்து கொள்வதா அல்லது விருதை ஏற்றுக்கொள்வதா என்ற கேள்வி எழவில்லை. நான் விருதைப் பெற ஒப்புக்கொள்ளாமல் எனது பெயரை அறிவித்தது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பற்ற செயல்’’ என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்நிலையில் இவ்விருது பற்றி சசி தரூருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக எச்ஆர்டிஎஸ்-இந்தியாவின் செயலாளர் அஜி கிருஷ்ணன் கூறியுள்ளார்.