

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி வழங்கப்பட்ட மனு மீது காவல்துறை முடிவெடுக்க உத்தரவிடக் கோரி தலித் கிறிஸ்தவ உரிமைகள் பாதுகாப்புக் குழு தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அமித் மகா ஜன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி கூறும்போது, “ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்த அனுமதிப்பது அவசியமா? அதை ஏன் மூடக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்றக் கருத்துக்கு சிஜேபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.