எல்பிஜி தட்டுப்பாடு ஏன் ? - மாநிலங்​களவை​யில் கார்கே கேள்வி

எல்பிஜி தட்டுப்பாடு ஏன் ? - மாநிலங்​களவை​யில் கார்கே கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: மாநிலங்​களவை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே நேற்று பேசி​ய​தாவது: மேற்கு ஆசி​யா​வில் நிலவி வரும் போர் பதற்​றத்​தால் நாடு முழு​வதும் சமையல் எரிவாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இது ஏழைகள், நடுத்​தரக் குடும்​பங்​கள், உணவகங்​கள் மற்​றும் விடு​தி​களை கடுமை​யாகப் பாதித்​துள்​ளது.

பிராந்​திய பதற்​றம் பற்றி தெரிந்​திருந்​தும் அரசு ஏன் மாற்று ஏற்பாடு​களைச் செய்​ய​வில்​லை ? பொது​மக்​களின் கவலை​யைப் போக்க எதிர்க்​கட்​சிகளை ஏன் ஒருங்​கிணைக்​க​வில்​லை ? எல்​பிஜி பதுக்​கல் மற்​றும் கள்​ளச்​சந்​தையைத் தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்​லை ? இவ்​வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

எல்பிஜி தட்டுப்பாடு ஏன் ? - மாநிலங்​களவை​யில் கார்கே கேள்வி
ரூ.500 லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 36 ஆண்டுக்குப் பின் ஓராண்டு சிறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in