ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்றது ஏன்? - சஞ்சய் ராவத் கேள்வி

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்றது ஏன்? - சஞ்சய் ராவத் கேள்வி

Published on

மும்பை: ஆர்​எஸ்​எஸ் நிகழ்ச்​சி​யில் நடிகர் சல்​மான் கான் கலந்து கொண்​டது கட்​டா​யத்​தின் பேரிலா அல்​லது மனமாற்​றமா என சிவ சேனா (உத்​தவ்) மூத்த தலை​வர் சஞ்​சய் ராவத் கேள்வி எழுப்பியுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சமீபத்​தில் நடை​பெற்ற ஆர்​எஸ்​எஸ் நிகழ்ச்​சி​யில் நடிகர் சல்​மான் கான் கலந்து கொண்​டார். இது ஒரு உண்​மை​யான நல்​லெண்ண முயற்​சியா அல்​லது மாறிவரும் அரசி​யல் சூழலில் தங்​களைத் தக்க​வைத்​துக் கொள்​ளும் விரக்தி முயற்​சி​யா?

வெறும் கூட்​டத்​தைக் கூட்ட அவர் அழைத்து வரப்​பட்​டாரா அல்​லது ஆர்​எஸ்​எஸ் அமைப்பில் இப்​போது முஸ்​லிம்​களும் வரவேற்​கப்​படு​கிறார்​கள் என்பதைக் காட்ட அழைக்​கப்​பட்​டா​ரா? இதற்கு ஆர்​எஸ்​எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்​கம் அளிக்க வேண்​டும்.

இந்த அழைப்பு மனமாற்​றத்​தால் வந்​ததல்ல, கட்​டா​யத்​தால் வந்தது என்று மக்​கள் பேசிக்​கொள்​கின்​றனர். ‘என்ன செய்​வது சகோ​தரரே, போய்த்​தான் ஆக வேண்​டும்’ என்று அங்கே மக்​கள் கிசுகிசுப்​பதை கேட்க முடிந்​தது. இவ்​வாறு அவர் கேள்​வி எழுப்பினார்​.

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்றது ஏன்? - சஞ்சய் ராவத் கேள்வி
Dear Men: இருண்ட உலகமும், சயானி போன்ற மீட்பர்களும்! - திரை தேவதைகள் 04

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in