சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்படாது: ஜன.1 முதல் புதிய விதிகள் அமல்

சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்படாது: ஜன.1 முதல் புதிய விதிகள் அமல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: மத்​திய தொலைத்​தொடர்பு துறை​யின் புதிய விதிகள் அடுத்த ஆண்டு ஜன.1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன்​படி சிம் கார்டு இல்​லா​விட்​டால் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்​ளிட்ட செயலிகள் செயல்​படாது.

இந்​தி​யாவில் சுமார் 131 கோடிக்​கும் அதி​க​மான சிம் கார்டுகள் பயன்​பாட்​டில் உள்​ளன. நாடு முழு​வதும் சுமார் 80 கோடிக்​கும் மேற்​பட்​டோர் ஸ்​மார்ட்​போன்​களை வைத்​துள்​ளனர். சுமார் 50 கோடிக்​கும் மேற்​பட்​டோர் சமூக வலை​தளங்​களைப் பயன்​படுத்தி வரு​கின்​றனர். இதன்​காரண​மாக கடந்த சில ஆண்​டுகளாக சைபர் குற்​றங்​கள் கணிச​மாக அதி​கரித்து வரு​கின்​றன.

கடந்த 2023-ம் ஆண்​டில் ஆன்​லைன் மோசடிகள் தொடர்​பாக நாடு முழு​வதும் 13.1 லட்​சம் புகார்​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இதன்​மூலம் சுமார் ரூ.7,465 கோடி வரை மோசடி செய்​யப்​பட்​டது. கடந்த 2024-ம் ஆண்​டில் ஆன்​லைன் மோசடி புகார்​களின் எண்​ணிக்கை 19.2 லட்​ச​மாக அதி​கரித்​தது. கடந்த 2025-ம் ஆண்​டில் இந்த எண்​ணிக்கை 24 லட்​ச​மாக உயர்ந்து உள்​ளது. இதன்​மூலம் சுமார் ரூ.22,495 கோடி வரை மோசடி செய்​யப்​பட்​டிருக்​கிறது.

பெரும்​பாலான சைபர் மோசடி கும்​பல்​கள், சிம் கார்டை பயன்​படுத்​தாமல் இணை​யத்தை மட்​டும் பயன்​படுத்தி வாட்ஸ் அப்காலில் பேசி அல்​லது தகவல்​களை அனுப்பி மக்​களை ஏமாற்றி வரு​கின்​றன. இதற்கு தீர்வு காண மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை புதிய வழிகாட்டு விதி​களை (சிம் பைண்​டிங்) வெளி​யிட்​டது. இந்த விதி​கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரு​கின்​றன.

இதன்​படி சிம் கார்டு இல்​லாமல் வாட்ஸ் அப், டெலி​கிராம், சிக்​னல், ஸ்​னாப்​சேட், சேர் சாட், ஜியோ சாட், அரட்டை, ஜோஸ் ஆகிய 8 செயலிகள் செயல்​படாது. சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​கள் வரும் டிசம்​பர் 31-ம் தேதிக்​குள் சிம் பைண்​டிங் விதி​களை முழு​மையாக பின்​பற்ற வேண்​டும் என்று மத்​திய அரசு கண்​டிப்​புடன் உத்தரவிட்டு உள்​ளது. இதன்​மூலம் சைபர் மோசடி குற்​றவாளி​களை எளிதில் கண்​டறிய முடியும். சைபர் குற்​றங்​களும் கணிசமாக குறையும்.

சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்படாது: ஜன.1 முதல் புதிய விதிகள் அமல்
தமிழகத்தில் ஒரே நாளில் 332 பேருக்கு டெங்கு காய்ச்சல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in