ரூ.4 லட்சம் கோடியில் மேற்கு வங்க மாநில பட்ஜெட் தாக்கல்

ரூ.4 லட்சம் கோடியில் மேற்கு வங்க மாநில பட்ஜெட் தாக்கல்
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப்​பேர​வை​யில் நிதி​யமைச்​சர் சந்திரிமா பட்​டாச்​சார்யா ரூ.4 லட்சம் கோடியில் 2026-27 நிதியாண்​டிற்​கான இடைக்​கால பட்​ஜெட்டை தாக்​கல் செய்​தார்.

பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண்​களைக் குறி​வைத்​து, ‘லக்​ஷ்மிர் பந்​தர்' திட்​டத்​தின் கீழ் மகளிருக்கு வழங்கப்​படும் மாதாந்​திர உதவித்​தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்​ளது.

வேலை​யில்​லாத இளைஞர்​களுக்​காக யுவ சாத்தி திட்டத்தின் கீழ் 21 முதல் 40 வயதுக்​குட்​பட்ட வேலை​யில்​லாத இளைஞர்​களுக்கு வேலை கிடைக்​கும் வரை மாதம் ரூ.1,500 உதவித்​தொகை வழங்கப்​படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

ரூ.4 லட்சம் கோடியில் மேற்கு வங்க மாநில பட்ஜெட் தாக்கல்
வதோதராவில் தயாராகும் ஏர்பஸ் சி295 விமானத்தை பிரதமர் தொடங்கி வைப்பார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in