ஊடகங்களிடம் தகவல்களைப் பகிர அதிகாரிகளுக்கு மேற்கு வங்க அரசு தடை

ஊடகங்களிடம் தகவல்களைப் பகிர அதிகாரிகளுக்கு மேற்கு வங்க அரசு தடை
Updated on
1 min read

கொல்கத்தா: அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஊடகங்களிடம் பேச அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.

அகில இந்தியப் பணி, மேற்கு வங்க குடிமைப் பணி, மேற்கு வங்க காவல் துறைப் பணி, மேற்கு வங்க அரசுப் பணி ஊழியர்களால் தகவல்களைப் பரப்புதல் என்ற தலைப்பில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘எந்தவொரு அரசு உத்தரவும் இல்லாமல், மேற்கண்ட பணிப் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆவணங்கள் அல்லது தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

மேலும், செய்தித்தாள்களில் எழுதுவது, தொலைக்காட்சி அல்லது வானொலி விவாதங்களில் பங்கேற்பது, அரசு குறித்தோ அல்லது அதன் கொள்கைகள் குறித்தோ விமர்சனக் கருத்துகளைத் தெரிவிப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மத்திய அரசுடனோ அல்லது பிற மாநிலங்களுடனோ உள்ள உறவுகளைப் பாதிக்கக்கூடிய கருத்துகளையோ அல்லது தகவல்களையோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களிடம் தகவல்களைப் பகிர அதிகாரிகளுக்கு மேற்கு வங்க அரசு தடை
“பிரதமர் மோடியின் 5 நாடுகள் பயணத்தில் 57 முக்கிய முடிவுகள்...” - பியூஷ் கோயல் விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in