

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 27 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கு மம்தா பானர்ஜியே பொறுப்பு என்று முதல்வர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுவேந்து அதிகாரி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் 27 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான பொறுப்பு மம்தா பானர்ஜிக்கே உரியது, பாஜகவுக்கோ தேர்தல் ஆணையத்துக்கோ அல்ல.
அவர் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே நீதித்துறை அதிகாரிகள் இந்த முடிவை எடுத்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்குப் பிறகு, பொறுப்பை மற்றவர் மீது சுமத்த மம்தா முயற்சிக்கிறார்.
மூன்று ஆணையர்களின் கூட்டமும், அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையும், எஸ்ஐஆர் தொடர்பான முடிவுகள் ஒரே நபரால் எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன. மக்கள் தீர்ப்பை மம்தா பானர்ஜியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு சுவேந்து அதிகாரி பேசினார்.