12 ஆயிரம் போலி பயனாளிகள்: மேற்கு வங்க முதல்வர் குற்றச்சாட்டு

12 ஆயிரம் போலி பயனாளிகள்: மேற்கு வங்க முதல்வர் குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

கொல்கத்தா: முந்​தைய திரிணமூல் காங்​கிரஸ் கட்​சி​யின்​போது இல​வச வீட்டு வசதித் திட்​டத்​தின் கீழ் பயன் அடைந்த 12 ஆயிரம் போலி பயனாளிகள் மீது சட்​டப்​படி நட​வடிக்கை எடுக்​கப்​படும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரி​வித்​தார்.

இது​குறித்து அவர் மேலும் கூறிய​தாவது: முந்​தைய திரிணமூல் காங்​கிரஸ் ஆட்​சி​யில் அந்த போலி நபர்​களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்​ளது. அவர்​களிட​மிருந்து அந்​தத் தொகையை மீட்ப​தற்​கான நட​வடிக்​கைகளில் இறங்​கி​யுள்​ளோம்.

அதில் 1,000 பேர் பணத்தை திரும்​பச் செலுத்​தி​யுள்​ளனர். மற்​றவர்​களுக்கு அதேபோல் பணத்​தைத் திருப்​பிச் செலுத்​தவேண்​டும். இல்​லா​விட்​டால் அவர்​கள் மீது சட்​டப்​படி நட​வடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்​தத் திட்​டத்​தில் நிதி முறைகேடான வகை​யில் செல்ல உடந்​தையாக இருந்த மேற்கு வங்க அரசு அதிகாரி​கள் மீதும் நட​வடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

12 ஆயிரம் போலி பயனாளிகள்: மேற்கு வங்க முதல்வர் குற்றச்சாட்டு
சோனியா காந்தி சுயசரிதை தாக்கம்: பஞ்சாப் தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு சாதகமா, பாதகமா?

X