பாகிஸ்தானின் ஸ்கர்டு ராணுவ தளத்தை தாக்க திட்டமிட்டோம்: முப்படைகளின் முன்னாள் தளபதி அனில் சவுகான் தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது...
பாகிஸ்தானின் ஸ்கர்டு ராணுவ தளத்தை தாக்க திட்டமிட்டோம்: முப்படைகளின் முன்னாள் தளபதி அனில் சவுகான் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்தானின் ஸ்கர்டு ராணுவ தளத்​தின் மீது தாக்​குதல் நடத்த திட்​ட​மிடப்​பட்​ட​தாக முப்​படைகளின் முன்​னாள் தளபதி அனில் சவு​கான் தெரி​வித்​துள்​ளார்.

காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்​குதலுக்கு பதிலடி கொடுக்​கும் வித​மாக கடந்​தாண்டு மே 7-ம் தேதி பாகிஸ்​தான் மற்றும் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​களில் உள்ள பல்வேறு தீவிர​வாத முகாம்​கள் மீது ‘ஆபரேஷன் சிந்​தூர்’ என்ற பெயரில் இந்​திய ராணுவத்​தினர் துல்​லிய​ தாக்​குதல்​களை நடத்தினர். இந்தப் போர் மே 10 அன்று முடிவுக்கு வந்​தது.

இதுகுறித்து முப்​படைகளின் முன்​னாள் தளபதி அனில் சவுகான் கூறிய​தாவது: மே 10-ம் தேதி காலை சுமார் 10 மணி​யள​வில் பேச்​சு​வார்த்​தைக்​காக பாகிஸ்தான் இந்தியாவை அணுகியது.

இந்​தச் சமயத்​தில்​தான் பாகிஸ்​தானின் சர்​கோதா விமானப்​படைத் தளத்தைத் தாக்​கு​வதற்கு இந்​திய விமானப்​படை அனு​மதி கோரியது.

“சர்​கோ​தா​வைத் தாக்​கலா​மா?” என்று விமானப்​படைத் தளபதி என்​னிடம் கேட்​டார். நான், தாராள​மாக தாக்​குங்​கள். மேலும் 2 இலக்​கு​களை அடை​யாளம் காணுங்​கள் என்று கூறினேன். அவர் அடை​யாளம் காட்​டிய இலக்​கு​களில் ஒன்று ஸ்கர்​டு. நாங்​கள் சம்மதம் தெரி​வித்​தோம், ஆனால் சிறிது நேரத்​துக்​குப் பிறகு, அங்கு வானிலை மோசமடைந்​த​தால், அவர்​கள் போலாரிக்கு மாற வேண்​டி​யிருந்​தது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

கில்​ஜித்​-பல்​டிஸ்​தானில், சிந்து நதிக்​கரை​யில் அமைந்​துள்ள ஸ்கர்டு, எல்லைக் கட்​டுப்​பாட்​டுக் கோடு மற்​றும் லடாக்​குக்கு அருகில் இருப்​ப​தால் பாகிஸ்​தானுக்கு மிகுந்த முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது.

பாகிஸ்தான் விமானப்​படை​யின் பிர​தான செயல்​பாட்​டுத் தளமாக செயல்​படும் இது, சீனா-​பாகிஸ்​தான் பொருளா​தார வழித்​தடத்​தின் ஒரு பகு​தி​யாகக் கட்​டப்​பட்டு வரும் சீன உள்கட்டமைப்​புத் திட்​டங்​களுக்​குப் பாது​காப்பு மற்​றும் தளவாட உதவி​களை வழங்​கும் முக்​கிய ராணுவ தளமாக​வும் விளங்குகிறது.

எனவே, இந்​தியா ஸ்கர்டு மீது தாக்​குதல் நடத்​தி​யிருந்​தால், அது பாகிஸ்​தானுக்கு ஒரு பெரும் அடியைக் கொடுப்​பது மட்டுமல்லாமல், சீனா​வுக்​கும் ஒரு கடுமை​யான செய்​தியை அனுப்​பி​யிருக்​கும் என ராணுவ வட்​டாரங்​கள் கூறுகின்​றன.

பாகிஸ்தானின் ஸ்கர்டு ராணுவ தளத்தை தாக்க திட்டமிட்டோம்: முப்படைகளின் முன்னாள் தளபதி அனில் சவுகான் தகவல்
கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்ற பயணிகளின் நிலை என்ன? - டிராவல்ஸ் நிறுவனம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in