“ஞானேஷ் குமாரை காப்பாற்ற நாட்டு மக்கள் மீதே போர்” - பிரதமர் மோடி மீது சிஜேபி நிறுவனர் குற்றச்சாட்டு

“ஞானேஷ் குமாரை காப்பாற்ற நாட்டு மக்கள் மீதே போர்” - பிரதமர் மோடி மீது சிஜேபி நிறுவனர் குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் காப்​பாற்ற அரசு இயந்​திரத்தை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்​து்கிறார் என்று அபிஜித் திப்கே குற்​றம்​சாட்டி உள்​ளார்.

கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே டெல்​லி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி போராடிய​வர்​களும் எதிர்க்​கட்​சித் தலை​வர்​களும் குறிவைக்​கப்​படு​கின்​றனர். சிஜேபி தலை​வர்​கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். டெல்லி இளைஞர்​கள் தெருக்​களில் போராடு​கின்​றனர். அவர்​கள் இழுத்துச் செல்​லப்​படு​கின்​றனர்.

நேஹா, ஆயிஷா, விலாஜ், இஷா ஆகியோ​ரும் இழுத்​துச் செல்லப்பட்​டனர். யாருக்​காக? ஒரே ஒரு ஞானேஷ் குமாரைக் காப்பாற்​றத்​தான். சொந்த நாட்டு மக்​கள் மீதே அரசு போர் தொடுத்​துள்​ளது. தலைமை தேர்​தல் ஆணை​யரைக் காக்க பிரதமர் மோடி, அரசின் முழு பலத்​தை​யும் பயன்​படுத்​தி​யுள்​ளார்.

தேர்​தல் ஆணை​யத்​தின் செயல்​பாட்​டை​யும், வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிரத் திருத்​தத்​தை​யும் (எஸ்​ஐஆர்) கேள்வி எழுப்​பு​கிறேன். 2024 மக்​கள​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​கும் இந்​தியா கூட்​ட​ணிக்​கும் இடையி​லான வாக்கு வேறு​பாடு 2 சதவீதமே. ஞானேஷ் குமார் பாஜக​வுக்கு உதவு​கிறார் என்று ஏன் சந்​தேகிக்​கக் கூடாது? இத்​திருத்​தத்​தில் 13 கோடி பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. இறந்​தவர்​களாக அறிவிக்​கப்​பட்ட சிலரை நான் சந்தித்​தேன்.

போராட்​டங்​களில் மாணவர்​களும், மம்தா, அர்​விந்த் கேஜ்ரி​வால், பின​ராயி விஜயன் உள்ளிட்டோரும் அடங்​கு​வர். நக்​சல் பாதிப்பு பகு​தி​களி​லிருந்து பாது​காப்​புப் படை​யினர் டெல்​லிக்கு வரவழைக்கப்​பட்​டனர். இவை அனைத்​தும் ஞானேஷ் குமாரைக் காக்​கவே. “ஒரே நாடு, ஒரே தேர்​தல்” வெறும் முழக்​கம். அரசின் உண்​மை​யான நோக்​கம் “ஒரே நாடு, ஒரே கட்​சி”. அவசரநிலையை அறிவிக்​கு​மாறு மோடிக்​குச் சவால் விடுக்​கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

“ஞானேஷ் குமாரை காப்பாற்ற நாட்டு மக்கள் மீதே போர்” - பிரதமர் மோடி மீது சிஜேபி நிறுவனர் குற்றச்சாட்டு
தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் வாக்காளர் சேர்க்கைக்கு புதியதாக ‘எஸ்எஸ்ஆர்’ அமல்: தேர்தல் ஆணையம் அதிரடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in