“கேரளாவில் பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் வீண்தான்!” - சசி தரூர்

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தேர்தல் அலுவலக திறப்பு விழாக்கு வருகை தந்த சசி தரூர்

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தேர்தல் அலுவலக திறப்பு விழாக்கு வருகை தந்த சசி தரூர்

Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் போட்டி என்றும், இங்கு பாஜகவுக்கு அளிப்பவை வீணான வாக்குகள்தான் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், ‘‘எனது முழு கவனமும் கேரள மாநில தேர்தல் மீதுதான் உள்ளது. அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள எனது சகாக்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவைப் பொறுத்தவரை மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இம்மாநிலத்தில் பாஜக என்பது முற்றிலும் புறக்கணிக்கத்தக்க சக்தி அல்ல என்றாலும், உண்மையான போட்டி என்பது ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் உள்ளது. எனவே, பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகள் என்பது வீணான வாக்குகள்தான்’’ என தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.13,800 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுடி செய்துள்ளது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், ‘‘இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விஷயம். சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பி ஓடியவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புக அனுமதிக்கக்கூடாது.

அவர்கள் நிரபராதிகள் என்றால், தாராளமாக இந்தியாவுக்கு வரட்டும்; இங்குள்ள நீதிமன்றத்தின் முன்பும்; நீதிபதியின் முன்பும் நின்று நிராதிபதி என்பதை நிரூபிக்கட்டும். அதுவே மிகவும் நியாயமான அணுகுமுறை. ஆனால், நம் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த குற்றவாளிகள் பலர் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நீதி அமைப்புகள் அத்தகைய குற்றவாளிகளை மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பினால், அது நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும்’’ என தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தேர்தல் அலுவலக திறப்பு விழாக்கு வருகை தந்த சசி தரூர்</p></div>
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in