தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
Updated on
1 min read

ஏக்தா நகர் (குஜராத்): உலகின் மிக உயர சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற விழாவில் 72-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான `தாதா சாகேப் பால்கே' விருது நடிகர் அனந்த நாக்-க்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொர் ஆண்டும் மத்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறுபிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விருதுகள் தலைநகர் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முதல் முறையாக டெல்லிக்கு வெளியே, குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சுற்றுலாத் தலத்தில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஏக்தா நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான `தாதா சாகேப் பால்கே' விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நடிகர் அனந்த நாக்-க்கு வழங்கினார். இதேபோல், சிறந்த நடிகருக்கான விருதை ‘பிரம்மயுகம்’ படத்திற்காக மம்முட்டியும், ‘சாந்து சாம்பியன்’ படத்திற்காக கார்த்திக் ஆர்யனும் பெற்றனர். சிறந்த நடிகைக்கான விருது யாமி கவுதமுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. இதேபோல், சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த படத்துக்கான தேசிய விருது ‘ஆர்ட்டிக்கல் 370’ திரைப்படத்துக்கும், முழுநீள திரைப்படம் அல்லாத பிரிவில் ‘பான்கார்’ படத்துக்கும், சிறந்த ஆவணப்பட விருது ‘ராம்-நவமி’ படத்துக்கும் வழங்கப்பட்டது.

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
அடுத்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இடத்தை மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும்: மத்திய அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in