“இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனை வேலு நாச்சியார்” - பிரதமர் மோடி புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம்
பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவர்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், ‘ ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார்.

நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம்
TAPS: தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்ட பலன்கள் என்னென்ன? - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in