

டேராடூன்: ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற வள்ளுவன் வாக்கு்ப்படி, உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ரவி தம்டா என்ற இளைஞர், எந்தவித முறையான பொறியியல் படிப்பும் இல்லாமல், இணையத்தையும் தனது சொந்த அனுபவத்தையும் பயன்படுத்தி பறக்கும் காரின் முன்மாதிரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
பி.ஏ. பட்டதாரியான ரவி, பேட்டரியில் இயங்கக்கூடிய ஒற்றை இருக்கை கொண்ட தன்னுடைய பறக்கும் காருக்கு ‘ஹபிடா ஸ்கைனெக்ஸ்’ என பெயரிட்டுள்ளார். இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த கார் ஓடுபாதை இல்லாமலேயே செங்குத்தாகப் புறப்பட்டுத் தரையிறங்கும் திறன் கொண்டது. இது ஒரு ட்ரோனைப் போல, மின் மோட்டார், காற்றாடிகளை பயன்படுத்துகிறது. இருப்பினும், இது வணிக ரீதியாகப் பயணிகளை ஏற்றிச் செல்ல இன்னும் சிறிது காலம் ஆகும்.
ரவி, உத்தராகண்டின் அல்மோரா மாவட்டத்தில் மலைப் பகுதியிலுள்ள கஃப்லிகான் கிராமத்தில் வளர்ந்தார். அங்குள்ள மலைப்பாங்கான நிலப்பரப்பால் மருத்துவ அவசரத் தேவைகளுக்கு நீண்ட மற்றும் வளைந்து நெளிந்த பாதைகளில் பயணிக்க வேண்டியிருந்தது. இப்பிரச்சினையைச் சமாளிக்க பறக்கும் கார் யோசனை அவருக்கு உருவா்னது. கடந்த 2015-ல் இந்தக் கனவை நனவாக்கும் பணியைத் தொடங்கினார். ஆய்வகம் அல்லது விலையுயர்ந்த உபகரணங்கள் எதுவு்மின்றி இணையத்தையே தனது வகுப்பறையாக மாற்றிக்கொண்டு, பல வருட சோதனைகளுக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டினார்.
முதல் முறையல்ல...
ரவி ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பை உருவாக்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன் அவர், செல்போன் சார்ஜ் ஏற்றும் காலணிகள், பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக், மூங்கில் வெட்டும் கருவி, வனத்துறைக்கான தீயணைப்பு உபகரணங்களை உருவாக்கியுள்ளார். முறையான கல்வித்தகுதியை விட கடின உழைப்பும், புதியன படைக்கும் ஆர்வமும் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு ரவி தம்டா மிகச்சிறந்த உதாரணம்.