

அல்மோரா: உத்தராகண்ட் மாநிலம், அல்மோராவில் இருந்து ராம் நகருக்கு தனியார் பேருந்து நேற்று காலை புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 19 பேர் பயணம் செய்தனர்.
பிகியாசைன் மலைப்பகுதி சாலையில் பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டனர்.