உத்தர பிரதேச அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

உத்தர பிரதேச அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: கடந்த 2024 நவம்பரில் உத்தரபிரதேசத்தின் சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆய்வு நடந்தபோது வன்முறை வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக முல்லா அஃப்ரோஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முல்லா அஃப்ரோஸ் மேல்முறையீடு செய்தார்.

அப்போது நீதிபதிகள், ‘‘காவல் துறையிடம் அளித்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க முடியாது. முல்லா அஃப்ரோஸ் மீதான தடுப்புக் காவல் உத்தரவு மற்றும் அதனை உறுதி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. உத்தரபிரதேச அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது,’’ என்று் உத்தரவிட்டனர்.

உத்தர பிரதேச அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
தமிழகம் முழுவதும் 13 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அஸ்ரா கார்க்குக்கு கூடுதல் பொறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in