அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ - பிரதமர் மோடி சந்திப்பு

வெள்ளை மாளிகை வர அதிபர் ட்ரம்ப் சார்பில் அழைப்பு
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ - பிரதமர் மோடி சந்திப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தியா வந்​துள்ள அமெரிக்க வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ, டெல்​லி​யில் பிரதமர் மோடியை நேற்று சந்​தித்து பேசி​னார்.

ரஷ்​யா​விடம் இந்​தியா அதி​கள​வில் கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதை தடுக்​கும் வகை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்​தி​யா​வுக்​கான இறக்​குமதி வரி​களை உயர்த்​தி​னார். மேலும், அமெரிக்​கா​வின் புதிய குடியேற்​றக் கொள்கை மற்​றும் ஹெச்​1பி விசா கட்டண உயர்வு ஆகியவை இந்​தியா - அமெரிக்கா இடையே​யான உறவில் விரிசலை ஏற்​படுத்​தின. இதனால் அதிபர் ட்ரம்ப் உடனான சந்​திப்பை பிரதமர் மோடி தவிர்த்​தார். அதன்​பின் இந்​தியா மீதான வரியை அமெரிக்கா குறைத்​தது, இது இரு தரப்பு வர்த்தக பேச்​சு​வார்த்​தைக்கு வழி​வகுத்​தது.

இந்​நிலை​யில் இருதரப்பு உறவு​களை சீரமைக்க அமெரிக்க வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ நேற்று இந்​தியா வந்​தார். முதல் பயண​மாக கொல்​கத்தா சென்ற அவர், புனித அன்னை தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்​டி' அமைப்​பின் தலை​மையக​மான ‘மதர் ஹவுஸ்​-க்​கு’ சென்​றார். பின் அவர் நேற்று மாலை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்​தித்து ஒரு மணி நேரம் ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது இந்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் இருந்​தனர்.

இருதரப்பு உறவு​களை மேம்​படுத்​து​வது, எரிசக்தி பாது​காப்​பு, கல்​வி, ராணுவ மற்​றும் வர்த்தக உறவு​களை மேம்​படுத்​து​வது பிராந்​திய மற்​றும் சர்​வ​தேச பாது​காப்​பு, இரு நாட்டு மக்​கள் இடையோன தொடர்​பு, மேற்கு ஆசியா நில​வரம் ஆகியவை குறித்து பிரதமர் மோடி​யுடன் மார்கோ ரூபியோ ஆலோ​சனை நடத்​தினர். பின்​னர், பிரதமர் மோடி அமெரிக்கா வர வேண்​டும் என அதிபர் ட்ரம்ப் சார்​பில் அழைப்பு விடுத்​தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்​டரில் விடுத்த செய்​தி​யில், ‘‘அமெரிக்க வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் மார்கோ ரூபியோவை வரவேற்​ற​தில் மகிழ்ச்​சி. இருதரப் உறவு​கள், சர்​வ​தேச விவ​காரம் குறித்து ஆலோ​சித்​தோம். உலக நன்​மைக்​காக இரு நாடு​களும் எப்​போதும் இணைந்து செயல்​படும்’’ என குறிப்​பிட்​டார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ - பிரதமர் மோடி சந்திப்பு
மேகேதாட்டு அணை விவகாரத்தில் விஜய் செய்ய வேண்டியது என்ன? - வேல்முருகன் யோசனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in