

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்தவர் சார்லி இவான்ஸ். இவர் சமூக வலைதளங்களில் கன்டென்ட் கிரியேட்டராக உள்ளார். அண்மையில் இந்தியாவுக்கு வந்த இவர் ரிஷிகேஷ் நகரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவ முறைகளைப்பார்த்து சார்லி இவான்ஸ் ஆச்சரியம் அடைந்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து சார்லி இவான்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘கடந்த 148 நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறேன். இந்திய மருத்துவம், மேற்கத்திய மருத்துவத்தை விட மிகவும் உயர்ந்தது என்பதே உண்மை.
ரிஷிகேஷுக்கு வந்து இங்குள்ள ஒரு மருந்தகத்துக்குச் சென்று ஆயுர்வேதாவில் கூறப்பட்டுள்ள இந்த யோகி காந்திகா மாத்திரைகளை வாங்கினேன். இந்த மருந்துகள் அற்புதமானவை. இந்தியர்கள் வீடுகளில் வைத்துள்ள ஆயுர்வேத மருந்துகளே சிறப்பாக உள்ளன. மேற்கத்திய மருந்துகளை விட இந்திய மருத்துவ முறை மிக உயர்ந்தது. இதை நான் என் கண் கூடாகக் கண்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.