அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா வந்துள்ள வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்

அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா வந்துள்ள வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்
Updated on: 
1 min read

மும்பை: அமெரிக்கா, இந்​தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்​தாகும் என்று அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வில் டீசலுக்கு கடுமையான தட்​டுப்​பாடு ஏற்பட்டு உள்​ளது. கடந்த ஜனவரியில் அங்கு ரூ.85-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.155-க்கு விற்​கப்​படு​கிறது.

இந்த சூழலில் அமெரிக்க பிரதி​நி​தி​கள் சபையின் 435 இடங்​கள் மற்​றும் செனட் அவை​யின் 35 இடங்​களுக்கு வரும் நவம்​பர் 3-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. டீசல் விலை உயர்வால் ஆளும் குடியரசு கட்​சிக்கு பெரும் பின்​னடைவு ஏற்​படும் என்று கூறப்படுகிறது. டீசல் தட்​டுப்​பாட்​டுக்கு தீர்வுகாண ரஷ்யாவில் இருந்து டீசலை கொள்​முதல் செய்ய அமெரிக்கா ஒப்​பந்​தம் மேற்கொண்​டது. இதன் தொடர்ச்​சி​யாக இந்​தி​யாவின் ரிலையன்ஸ் நிறு​வனத்​திடம் இருந்து பெரு​மளவு டீசலை கொள்முதல் செய்ய அமெரிக்க அரசு திட்​ட​மிட்டு உள்​ளது.

இது​தொடர்​பாக அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ 3 நாட்​கள் பயண​மாக நேற்று மும்பை வந்​தார். குஜராத்தின் ஜாம்​நகரில் உள்ள ரிலை​யன்ஸ் சுத்​தி​கரிப்பு ஆலைக்கு அவர் நேரடி​யாக செல்​கிறார். ரிலை​யன்ஸ் குழும தலை​வர் முகேஷ் அம்பானி உள்​ளிட்​டோரை சந்​தித்​துப் பேச உள்ளார்.

முன்​னதாக, மும்​பையில் நேற்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கரை அவர் சந்​தித்​துப் பேசினார். பின்​னர் மும்பை தாஜ் மஹால் பேலஸ் ஓட்​டலில் உள்ள நினைவிடத்​தில் 2008-ம் ஆண்டு மும்பை தாக்​குதலில் உயி​ரிழந்​தோருக்கு மார்கோ ரூபியோ அஞ்சலி செலுத்​தினார்.

இதன்​பிறகு நிருபர்​களிடம் அவர் கூறியதாவது: அமெரிக்கா, இந்​தியா இடையே வர்த்​தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பேச்சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வருகிறது. சில விஷயங்​களில் கருத்து வேறு​பாடுகள் நிலவுகின்றன. அவை களை​யப்​படும்.

வெகு விரைவில் அமெரிக்கா, இந்​தியா இடையே வர்த்​தக ஒப்பந்தம் கையெழுத்​தாகும். பல்​வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்​ணெயை இந்​தியா கொள்​முதல் செய்து வரு​கிறது. இது மிகச் சிறந்த வணிக நட​வடிக்கை ஆகும். கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு துறை​யில் இந்​தியா “சூப்​பர் பவ​ராக” உரு​வெடுத்​திருக்​கிறது. வெனிசுலா நாட்​டின் கச்சா எண்​ணெயை இந்​திய நிறுவனங்களுக்கு வழங்க தயாராக உள்​ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா வந்துள்ள வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்
பாமக தலைவர் அன்புமணிக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in