மேம்படுத்தப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் விமானப் படையில் விரைவில் இணையும்: தளபதி அசுதோஷ் தீட்சித் தகவல்

மேம்படுத்தப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் விமானப் படையில் விரைவில் இணையும்: தளபதி அசுதோஷ் தீட்சித் தகவல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்கள், இந்​திய விமானப் படை​யில் விரைவில் இணை​யும் என்று படைத் தளபதி அசுதோஷ் தீட்சித் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய விமானப் படை​யில் 721 போர் விமானங்​கள் உட்​பட மொத்தம் 1,750 விமானங்​கள் உள்​ளன. தற்​போதைய சூழலில் விமானப் படைக்கு மேலும் 240 போர் விமானங்​கள் தேவை என்று கணக்​கிடப்​பட்டு உள்​ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்ய உள்​நாட்​டில் தேஜஸ் போர் விமானங்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. கடந்த 2015-ல் தேஜஸ் மார்க் 1 போர் விமானங்​கள் விமானப்​படையில் சேர்க்​கப்​பட்​டது.

குஜராத் மற்​றும் தமிழக விமானப் படைத் தளங்​களில் மொத்​தம் 36 தேஜஸ் மார்க் 1 விமானங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. இவை மேம்​படுத்​தப்​பட்டு தேஜஸ் மார்க் 1 ஏ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வரு​கிறது.

இது​தொடர்​பாக விமானப் படைத் தளபதி அசுதோஷ் தீட்​சித் தனியார் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறியிருப்பதாவது: எச்​ஏஎல் நிறு​வனம் சார்​பில் தேஜஸ் மார்க் 1 ஏ என்ற பெயரில் புதிய போர் விமானங்​கள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த மேம்​படுத்​தப்​பட்ட போர் விமானங்​கள் விரைவில் விமானப் படை​யில் சேர்க்​கப்​படும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் தேஜஸ் மார்க் 1 ஏ-யின் புதிய படைப்​பி​ரிவு (18 போர் விமானங்​கள்) உரு​வாக்​கப்​படும். அடுத்த கட்​ட​மாக தேஜஸ் மார்க் 2 போர் விமான தயாரிப்​பிலும் தீவிரம் காட்​டப்​பட்டு வரு​கிறது. வரும் 2027-ல் இந்த புதிய போர் விமானம் அறி​முகம் செய்​யப்​படும். இந்​திய விமானப் படை​யில் தேஜஸ் ரக போர் விமானங்​களின் எண்​ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

மேம்படுத்தப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் விமானப் படையில் விரைவில் இணையும்: தளபதி அசுதோஷ் தீட்சித் தகவல்
தமிழக காங்கிரஸில் மீண்டும் வெடிக்கும் கோஷ்டி பூசல்

X