சட்டவிரோத நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை: உ.பி. முதல்வர் உத்தரவு

சட்டவிரோத நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை: உ.பி. முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

கோரக்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கோரக்​பூரில் நேற்று நடைபெற்ற 'ஜனதா தர்​ஷன்' நிகழ்ச்​சி​யில் முதல்​வர் யோகி ஆதித்ய​நாத் பங்​கேற்​றார்.

அப்​போது சுமார் 200 பேரைச் சந்​தித்த அவர், அவர்​களின் மனுக்களைப் பெற்​றுக்​கொண்​டார். அப்​போது,"கவலைப்பட வேண்​டாம் உங்​கள் குறை​களைத் தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்​கும்" என்று அவர் உறு​தி​யளித்​தார். பல்​வேறு விவ​காரங்​கள் தொடர்​பான புகார்​களைத் தீர்ப்​ப​தற்​காக, சம்​பந்​தப்​பட்ட நிர்​வாக மற்​றும் காவல் துறை அதி​காரி​களுக்கு விண்​ணப்​பங்​களை அனுப்பிய முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், புகார்​கள் மீது உரிய காலத்​தில் தீர்வு காணுமாறு அதி​காரி​களுக்கு உத்தரவிட்டார்.

சட்​ட​விரோத நில ஆக்​கிரமிப்பு தொடர்​பான புகார்​களைத் தீவிரமாகக் கவனத்​தில் கொண்ட அவர், மற்​றவர்​களின் நிலத்தை வலுக்​ கட்​டாய​மாக ஆக்​கிரமிப்​பவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கு​மாறு அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார்.

சட்டவிரோத நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை: உ.பி. முதல்வர் உத்தரவு
கேரள தேர்தல் களத்தில் முந்தப் போவது யார்? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in