பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது.

சிஜேபி போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தர்மேந்திர பிரதான் இன்று (சனிக்கிழமை) அறிவித்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.

இந்தச் சூழலில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று இந்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

தற்போது மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷி, கூடுதல் பொறுப்பாக கல்வித் துறையை கவனிக்க உள்ளார்.

யார் இந்த பிரகலாத் ஜோஷி?

63 வயதான பிரகலாத் ஜோஷி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தார்வாட் மக்களவை தொகுதியின் உறுப்பினராக உள்ளார். மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்வித் துறை அவருக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு, கல்வி சீர்திருத்தம் என பல்வேறு சவால்களை இத்துறை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தப் பொறுப்பை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறை​கேடு​களுக்கு கண்​டனம் தெரி​வித்​தும், இந்த முறை​கேடு​களுக்கு தார்மி​கப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் ராஜி​னாமா செய்ய வேண்டும் என்று வலி​யுறுத்​தி​யும் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), டெல்லி ஜந்தர் மந்​தரில் கடந்த ஜூன் 28-ம் தேதி போராட்​டத்தை தொடங்கியது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி சிஜேபி கட்சி சார்​பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்​தப்​பட்​டது. இதில் ஏராளமான மாணவர்​கள் பங்​கேற்​றனர். மாணவர்களை கலைக்க டெல்லி போலீ​ஸார் தடியடி நடத்​தி, கண்ணீர் புகைக்​குண்​டு​களை வீசினர். இதில் சிலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தேசம் முழுவதும் உள்ள பல்​வேறு மாநிலங்களி​லும் நீட் தேர்​வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்​பினர் போராட்​டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு - சிஜேபி இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி</p></div>
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம் | நீட் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in