ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: நீண்ட காலம் சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய நூண்ணூட்ட சத்துக்களுடன் செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார்.

விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்யும் அரிசிகள் உணவு தானிய சேமிப்பு கிடங்கில் 2 முதல் 3 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உணவு கிடங்குகளில் 674 லட்சம் டன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 372 லட்சம் டன்கள் ஒவ்வொரு ஆண்டும் இலவச அரிசி திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசியை எவ்வளவு காலம் சேமித்து வைக்க முடியும் என்ற ஆய்வில் காரக்பூர் ஐஐடி ஈடுபட்டது. நமது நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசியை நீண்ட காலம் சேமித்து வைத்தால் அது உடைந்து விடுகிறது. மேலும், அவற்றில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவுகளும் குறைவது ஆய்வில் தெரிய வந்தது.

இதையடுத்து இப்பிரச்சினைகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வரை செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
கர்நாடக கிராமத்தில் அரசு சார்பில் சலூன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in