அல் பலா பல்கலைக்கு அருகில் நிலத்துக்கு அடியில் செயல்பட்ட மதரஸா

அல் பலா பல்கலைக்கு அருகில் நிலத்துக்கு அடியில் செயல்பட்ட மதரஸா
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த 10-ம் தேதி, உமர் முகமது நபி என்ற மருத்​து​வர் கார் வெடிகுண்டு தாக்​குதல் நடத்​தி​னார். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

இந்​நிலை​யில் அல் பலா பல்​கலைக்​கழகத்​தில் இருந்து வெறும் 900 மீட்​டர் தொலை​வில் நிலத்​துக்கு அடி​யில் ஒரு மதரஸா செயல்​பட்டது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. 4,000 - 5,000 சதுர அடி பரப்​பளவு கொண்ட இந்த மதரஸா தரை மட்​டத்​தில் இருந்து சுமார் 7 அடி கீழே உள்​ளது. அதன் 3 அடி அமைப்பு மட்​டுமே வெளி​யில் தெரி​கிறது. இதன் வடிவ​மைப்பு வழக்​க​மான மதரஸாவுடன் பொருந்​தாமல் உள்​ளது. இந்த மதரஸாவுக்கு குழந்​தைகள் அடிக்​கடி செல்​வார்​கள் என்று அரு​கில் வசிப்​பவர்​கள் கூறினர்.

இந்த சொத்து இஷ்தே​யாக் என்ற மவுலானா பெயரில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவர், உமர் நபி​யின் கூட்​டாளி​களில் ஒரு​வ​ரான முஸம்​மில் ஷகீலுக்கு ஓர் அறையை வாடகைக்கு கொடுத்​தவர் ஆவார். மதரஸாவுக்கு முஸம்​மில் ஷகீலும் நிதி கொடுத்​துள்​ளார். இவரைப் பற்​றிய விசா​ரணை​யில் மவுலானா பெயர் வெளி​யானதை தொடர்ந்து அவரும் கைது செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில் டெல்லி குண்​டு​ வெடிப்​புடன் இதற்கு தொடர்பு உள்​ளதா என்​பது குறித்​தும் விசா​ரித்து வரு​கின்​றனர்.

அல் பலா பல்கலைக்கு அருகில் நிலத்துக்கு அடியில் செயல்பட்ட மதரஸா
சத்தீஸ்கர் மாநிலத்தில் 41 நக்சலைட்கள் சரண்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in