உத்தவ் சிவசேனா எம்.பி.க்கள் அதிருப்தி: பாஜக தலைவர்களை சந்தித்ததால் பரபரப்பு

உத்தவ் சிவசேனா எம்.பி.க்கள் அதிருப்தி: பாஜக தலைவர்களை சந்தித்ததால் பரபரப்பு
Updated on
1 min read

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலத்​தில் சிவசேனா கட்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்​டாக உடைந்​து, ஏக்​நாத் ஷிண்டே தலை​மை​யில் ஓர் அணி​யாக​வும், உத்​தவ் தாக்​கரே தலை​மை​யில் ஓர் அணி​யாக​வும் பிரிந்​தது. தற்​போது சிவசே​னா​வில் (உத்​தவ் அணி) நடை​பெறும் சம்​பவங்​கள் கட்​சிக்​குள் மற்​றொரு பிளவை ஏற்​படுத்​துமா என்ற சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மும்​பை​யில் உள்ள உத்​தவ் தாக்​கரே​வின் வீட்​டில் சமீபத்​தில் கட்சியின் முக்​கிய ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மராத்​வாடா மக்​களவை தொகுதி எம்​.பி. சஞ்​சய் ஜாதவ் பங்கேற்கவில்​லை. சேனா பவனில் நடை​பெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்​டத்​தை​யும் அவர் புறக்​கணித்​தார். அவரைத் தொடர்பு கொள்ள முடிய​வில்லை எனவும் கூறப்​படு​கிறது.

சிவசேனா உத்​தவ் அணி​யில் உள்ள எம்​.பி.க்​கள் சிலர் கடந்த சில மாதங்​களாகவே அதிருப்​தி​யில் இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. உள்ளாட்​சித் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் கட்​சித் தலை​மை​யின் ஈடுபாடு குறை​வாக இருந்​ததே, தோல்வி​களுக்கு காரணம் என கூறப்​படு​கிறது. அரவிந்த் சாவந்த் மற்​றும் அனில் தேசாய் போன்ற தலை​வர்​களைத் தவிர, மற்ற எம்​.பி-க்​கள் கட்சி மாறலாம் என கூறப்​படு​கிறது.

ஹிங்​கோலி எம்​.பி. நாகேஷ் பாட்​டில் அஷ்டிகர் மற்​றும் யவத்​மால்​-​ வாஷிம் எம்​.பி. சஞ்​சய் தேஷ்​முக் ஆகியோர் டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர் பிர​தாப் ராவ் ஜாதவ் சமீபத்​தில் அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்​டனர். அதன்​பின் சஞ்​சய் ஜாதவ் எம்​.பி. டெல்​லி​யில் அமைச்​சர் அமித் ஷாவைச் சந்​தித்து பேசி​யுள்​ளார். இது கட்சி தாவல் குறித்த ஊகங்​களை வலுப்​படுத்​தி​ உள்​ளது.

ஆம் ஆத்மி கட்​சி​யின் 7 எம்​.பி.க்​கள் சமீபத்​தில் பாஜக.​வில் இணைந்த நிலை​யில், சிவசேனா உத்​தவ் அணி​யிலும் சில எம்.பி.க்​கள் அதிருப்​தி​யில் இருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

உத்தவ் சிவசேனா எம்.பி.க்கள் அதிருப்தி: பாஜக தலைவர்களை சந்தித்ததால் பரபரப்பு
Bulbbul: கொலையும் செய்வாள் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in