முன்னணி பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை

பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் | கோப்புப் படம்

பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் | கோப்புப் படம்

Updated on: 
1 min read

புதுடெல்லி: ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற முன்னணி பாரா தடகள வீரரான நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 42.

இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் சத்தியநாராயணா இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சத்தியநாராயணா, “நீரஜ் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது” என தெரிவித்தார்.

'F55' பிரிவில் போட்டியிட்டு வந்த நீரஜ் யாதவ், ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான தடையால், இந்த மாத தொடக்கத்தில் ஐச்சி - நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இது தொடர்பாக கூறிய சத்தியநாராயணா, “தற்கொலைக்கான காரணத்தை என்னால் ஊக்கிக்க முடியவில்லை. ஆனால், ஒரு விளையாட்டு வீரர் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை சமநிலையடன் எதிர்கொள்ள வேண்டும். இத்தகைய தீவிரமான ஒரு முடிவை அவர் எடுத்தது துரதிருஷ்டவசமானது.” என தெரிவித்தார்.

இந்தியாவின் மிகச் சிறந்த பாரா தடகள வீரர்களில் ஒருவரான நீரஜ் யாதவ், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2018-ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் யாதவ், 2023-ல் ஹாங்சூவில் நடைபெற்ற போட்டிகளில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதலில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஏழு வயதில் போலியோ பாதிப்பால் மாற்றுத் திறனாளியான நீரஜ் யாதவ், முதலில் சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டார். பின்னர், பாரா தடகளத்துக்கு மாறிய அவர், சர்வதேச அரங்கில் தனது முத்திரையைப் பதித்தார்.

நீரஜ் யாதவ் 'F55' பிரிவில் போட்டியிட்டார். இந்த பிரிவில் அமர்ந்த நிலையில் குண்டு எறிதல், வட்டு எறில், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

<div class="paragraphs"><p>பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் | கோப்புப் படம்</p></div>
ஃபிளைதுபாய் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய வீரதீர விருது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in