திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? - பக்தர்கள் அதிருப்தி

போலீஸ் கெடுபிடி குறித்து...
திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? - பக்தர்கள் அதிருப்தி
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்மோற்சவத்தில் பாது​காப்பு எனும் பெயரில் எங்கு பார்த்தாலும் போலீஸ் கெடுபிடி அதி​க​மாக இருப்​ப​தாக​வும், இதனால் சர்வ தரிசனத்​துக்கு 8 கி.மீ. தூரம் வரை நடக்க விடுவதாக​வும் பக்​தர்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர்.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா நேற்று 6-வது நாளை எட்​டியது. புரட்​டாசி மாத​மும் பிறந்து விட்​ட​தால் பக்தர்​களின் வருகை சற்று அதி​க​மாகவே உள்​ளது. கருட சேவையை முன்​னிட்டு சுமார் 5,000 போலீ​ஸார் பாது​காப்​புப் பணிகளில் ஈடு​பட்​டு வழக்கத்திற்கு மாறாக பைக், டாக்ஸி, கார்​களை அனுமதிக்காமல் கெடுபிடிகளை விதித்தனர்.

இவர்​களை மதி​யம் 1 மணி​யில் இருந்து திரு​மலைக்கு அனு​ம​திக்க வில்​லை. இதனால் அலிபிரி கருடன் சிலை அருகே போலீ​ஸார், பக்​தர்​கள் இடையே கடும் வாக்​கு​வாதம் நடந்​தது.

நேரடியாக சர்வ தரிசனம்

பிரம்​மோற்​சவம் என்​ப​தால் மூல​வரை தரிசனம் செய்ய விஐபி தரிசனம், முதி​யோர், மாற்றுத் திற​னாளி​கள், கைக்​குழந்​தைகளை கொண்டு வரு​வோர் என அனைத்து சிறப்பு தரிசனங்களை​யும் தேவஸ்​தானம் ரத்து செய்​துள்​ளது. மேலும், திருப்​ப​தி​யில் சர்வ தரிசன டோக்​கன்​கள் வழங்​கு​வதை​யும் நிறுத்தி விட்​டது.

இதனால் திரு​மலை​யில் எவ்​வித டிக்​கெட்​களும் இன்றி நேரடி​யாக பக்​தர்​கள் சர்வ தரிசனத்​துக்கு செல்​லலாம் என தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது. ஆனால், சர்வ தரிசனம் செல்ல பல கி.மீ. தூரம் வரை நடந்​து, நடந்து பக்​தர்​கள் கால் வலி​யால் அவதிப்படுகின்றனர். வைகுண்​டம் க்யூ காம்ப்​ளக்​ஸில் சென்று சுவாமியை தரிசிக்க 2 மணி நேரம் போதும்.

ஆனால், வெளியி​லிருந்து சுமார் 6 கி.மீ. தூரம் வரை சுற்​றிச் சுற்றி நடந்​து, வைகுண்​டம் காம்ப்​ளக்​ஸுக்​குள் நுழைந்து அங்​கிருந்து மேலும் 2 அல்​லது 3 கி.மீ. தூரம் வரை நடந்து சென்று தற்​போது சுவாமியை பக்​தர்​கள் தரிசனம் செய்து வரு​கின்​றனர். விஐபி பக்தர்​கள் மட்​டும் சற்று தூரம் நடந்து சென்று சுவாமியை தரிசிக்கின்​றனர். ஆனால் சா​மானிய பக்​தன் 8 கி.மீ. தூரம்​ வரை நடந்​து செல்​ல வேண்​டு​மா? என பக்​தர்​கள்​ கேள்​வி எழுப்​பி உள்ளனர்​.

திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? - பக்தர்கள் அதிருப்தி
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைக் குறி வைத்து ஒரே இரவில் 1,000 ட்ரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in