‘ஐஎன்எஸ் பெட்வா’ போர்க் கப்பலை நவீனமயமாக்க ரூ.500 கோடியில் ஒப்பந்தம் செய்தது பாதுகாப்பு துறை

‘ஐஎன்எஸ் பெட்வா’ போர்க் கப்பலை நவீனமயமாக்க ரூ.500 கோடியில் ஒப்பந்தம் செய்தது பாதுகாப்பு துறை
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்திய கடற்படைக்​குச் சொந்​த​மான ‘ஐஎன்எஸ் பெட்வா’ போர்க் கப்​பலை நவீனமய​மாக்​கு​வதற்​காக, கொச்​சின் ஷிப்​யார்டு நிறு​வனத்​துடன், பாது​காப்பு அமைச்​சகம் ரூ.498.58 கோடி மதிப்​பிலான ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

டெல்​லி​யில் பாது​காப்​புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் முன்​னிலை​யில் நேற்று இந்த ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி, இந்​திய கடற்​படை​யின் பிரம்​மபுத்ரா ரக போர்க் கப்​பலான ஐஎன்​எஸ் பெட்​வா​வில் முக்​கிய​மான தொழில்​நுட்ப மாற்​றங்​கள் மேற்​கொள்​ளப்பட உள்​ளன. இதன்​படி, தற்​போது கப்​பலில் பயன்​படுத்​தப்​படும் நீராவி மூலம் இயங்​கும் உந்​து​விசை அமைப்பு அகற்​றப்​பட்​டு, அதற்​குப் பதிலாக டீசல் என்​ஜின் அடிப்படையிலான புதிய உந்​து​விசை அமைப்பு பொருத்​தப்​படும்.

இந்​தத் திட்​டம் இந்​தி​யா​வின் கப்​பல் பழுது​பார்ப்பு மற்​றும் பராமரிப்​புத் துறை​யில் உள்​நாட்​டுத் தொழில்​நுட்​பத் திறன்​களை மேலும் வலுப்​படுத்​தும்.

குறிப்​பாக, சிக்​கலான உந்​து​விசை அமைப்​பு​களை மாற்​று​தல் மற்​றும் கடற்​படைக் கப்​பல்​களை நவீனமய​மாக்​குதல் போன்ற பணி​களை மேற்​கொள்​ளும் திறன் அதி​கரிக்​கும். இந்​தத் திட்​டத்​தில் 50-க்​கும் மேற்​பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறு​வனங்​கள் (எம்​எஸ்​எம்இ) பங்​கேற்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பிரளய் ஏவு​கணை சோதனை

ஒடி​சா​வில் உள்ள டாக்​டர் ஏ.பி.ஜே.அப்​துல் கலாம் தீவில் இருந்து கடந்த 5-ம் தேதி பிரளய் ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்​டிஒ) வெற்​றிகர​மாகப் பரிசோதித்​தது. இந்​த சோதனை​யின் அனைத்து இலக்​கு​களும் வெற்​றிகர​மாக எட்​டப்​பட்​டன. சந்​திப்​பூரில் உள்ள ஒருங்​கிணைந்த சோதனை மையம் சார்​பில், நிறு​வப்​பட்​டிருந்த கண்​காணிப்​புக் கருவி​கள் பதிவு செய்த தரவு​கள் மூலம் இதை உறுதி செய்​த​தாக பாது​காப்பு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

‘ஐஎன்எஸ் பெட்வா’ போர்க் கப்பலை நவீனமயமாக்க ரூ.500 கோடியில் ஒப்பந்தம் செய்தது பாதுகாப்பு துறை
அவசரநிலை முதல் அரசியல் நுழைவு வரை: சுயசரிதை நூலில் சோனியா காந்தி விவரிப்பு

X