கேரளாவின் அடுத்த முதல்வர் யார்? - காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அஜய் மக்கான் விளக்கம்

கேரள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மே 7ம் தேதி திருவனந்தபுரத்துக்கு வருகை தந்த அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக்

கேரள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மே 7ம் தேதி திருவனந்தபுரத்துக்கு வருகை தந்த அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக்

Updated on
1 min read

புதுடெல்லி: கேரளாவின் அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் முழு அதிகாரத்தை கட்சித் தலைமைக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அளித்துள்ளதாக மேலிட பார்வையாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் கேரள பொறுப்பாளரான தீபா தாஸ் முன்ஷியுடன் இணைந்து அங்கு (கேரளா) செல்லுமாறு எங்கள் இருவருக்கும் (அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக்) அறிவுறுத்தப்பட்டது.

காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை நாங்கள் மே 7-ம் தேதி கூட்டினோம். ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் நாங்கள் தனித்தனியாகப் பேசினோம். கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் தொடர்பான அவர்களின் கருத்துக்களைக் கேட்டோம். அவர்கள் கூறிய மற்ற கருத்துகளையும் நாங்கள் குறித்துக்கொண்டோம்.

இதையடுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான முழு அதிகாரத்தையும் காங்கிரஸ் தலைமைக்கு அளிக்கும் ஒருவரி தீர்மானத்தை அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்றிணைந்து ஒருமனதாக நிறைவேற்றினர். அந்த தீர்மானத்தின் நகல் கட்சித் தலைவர் தலைமையிலான மேலிடத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பான அறிக்கையையும் நாங்கள் மேலிடத்திடம் சமர்ப்பித்துள்ளோம். காங்கிரஸ் மேலிடம் விரைவில் தனது முடிவை அறிவிக்கும்” என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதாலா, கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் சன்னி ஜோசப் ஆகியோர் இன்று டெல்லி செல்ல உள்ளதாகவும் கட்சி மேலிடத்தைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் ஒருவரே கேரள காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளிக்கும் நிகழ்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>கேரள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மே 7ம் தேதி திருவனந்தபுரத்துக்கு வருகை தந்த அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக்</p></div>
தவெக ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் அழைத்திருக்க வேண்டும்: எம்.ஏ.பேபி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in