​திருமலை​யில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை

​திருமலை​யில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை
Updated on: 
1 min read

திருமலை: திருமலை​யில் தொடர் மழை, பனிமூட்​டம் காரணமாக திருப்​பதி மலைப்​பாதைகளில் வாகன ஓட்​டிகள் மிகவும் பாது​காப்​பாக வாக​னத்தை செலுத்த வேண்​டுமென திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் பக்​தர்​களுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

திரு​மலை​யில் கருட சேவை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்​பாக, கடந்த 2 நாட்​களாக திருப்​ப​தி, திரு​மலை​யில் கன மழை பெய்ய தொடங்கி விட்​டது. இதன் காரண​மாக நீர்​நிலைகளுக்கு நீர் வரத்து அதி​கரித்​துள்​ளது. வெப்​பம் தணிந்து மலைப்​பகு​தி​களில் குளிர் நில​வுவ​தால் திரு​மலை முழு​வதும் பனிமூட்​டம் அதிகமாக காணப்​படு​கிறது.

காலை வேளை​களி​லும், மாலை வேளை​களி​லும் திரு​மலையே பனி​யால் மூடிக்​கொள்​கிறது. இதனால் திருப்​ப​தி-​திரு​மலை இடையே வாகன ஓட்​டிகள் பாதை சரிவர தெரி​யாமல் அவதிக்குள்ளாகி வரு​கின்​றனர். ஆதலால், மலைப்​பாதைகளில் செல்​லும் வாகன ஓட்​டிகள் போக்​கு​வரத்து நிபந்​தனை​களை கடைப்​பிடித்​து, மெது​வாக செல்​ல​வும் என்​றும், முன்​னால் செல்லும் வாக​னங்​களை வேக​மாக முந்தி செல்ல முயற்​சிக்க வேண்​டா​மென்​றும் திருப்​பதி தேவஸ்​தானம் எச்​சரிக்கை விடுத்துள்​ளது.

​திருமலை​யில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை
நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in