கேரளா: பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 18 ஆண்டு சிறை

கேரளா: பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 18 ஆண்டு சிறை
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவில் 2013-ல் டியூஷன் படிக்க வந்த சிறுமியை ஓராண்டுக்கு மேலாக ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மன நோய்க்கு ஆளானார்.

பின்னர் பிளஸ்-2, நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தபோது, டியூஷன் ஆசிரியரைப் போன்ற ஒருவரைப் பார்த்துவிட்டு 2024-ல் மீண்டும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது.

அப்போதுதான் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் விவரம் தெரிய வந்து சிகிச்சை அளித்த டாக்டர் மூலம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

போலீஸார் விசாரணை நடத்தி 57 வயதான அந்த ஆசிரியரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆசிரியருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை, ரூ.35,000 அபராதம் விதித்து திருவனந்தபுரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளா: பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 18 ஆண்டு சிறை
கொச்சி துறைமுகத்தில் ஈரான் போர்க்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in