முப்படைத் தலைமை தளபதியாக தமிழகத்தின் ராஜா சுப்பிரமணி பதவியேற்பு

முப்​படை தலைமை தளப​தி ராஜா சுப்பிரமணி

முப்​படை தலைமை தளப​தி ராஜா சுப்பிரமணி

Updated on
1 min read

புதுடெல்லி: முப்​படை தலைமை தளப​தி​யாக இருந்த ஜெனரல் அனில் சவு​கானின் பதவிக்​காலம் நேற்று முன்​தினம் நிறைவடைந்தது. இதையடுத்து நாட்​டின் 3-வது முப்​படை தலைமை தளப​தி​யாக தமிழகத்​தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவி​யேற்​றார்.

இவர் தேசிய பாது​காப்பு அகாடமி மற்​றும் இந்​திய ராணுவ அகாடமி​யில் பயிற்​சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்​திய ராணுவத்​தின் கர்​வால் ரைபிள்ஸ் படைப்​பிரி​வில் அதி​காரி​யாக சேர்ந்​தார். பல பிரிவு​களில் தலைமை அதி​காரி​யாக பணியாற்றிய​வர். ராணுவத் துணை தளப​தி​யாக பணி​யாற்​றிய இவர் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெற்​றார்.

பாகிஸ்​தான் மற்​றும் சீனா நில​வரங்​களை இவர் நன்கு அறிந்​தவர் என்​ப​தால், தேசிய பாது​காப்பு கவுன்​சில் தலைமை செயல​கத்​தில் ராணுவ ஆலோ​சக​ராக பணியாற்றி வந்தார்.

புதிய கடற்​படை தளப​தி​:

இந்​திய கடற்​படை தளப​தி​யாக இருந்த அட்​மிரல் தினேஷ் குமார் திரி​பாதி ஓய்வு பெற்றதையடுத்து, நாட்​டின் 27-வது கடற்​படை தளப​தி​யாக அட்மிரல் கிருஷ்ண சுவாமி ​நாதன் நேற்று பொறுப்​பேற்​றார்.

<div class="paragraphs"><p><em>புதிய கடற்​படை தளப​தி கிருஷ்ண சுவாமி​ நாதன்</em></p></div>

புதிய கடற்​படை தளப​தி கிருஷ்ண சுவாமி​ நாதன்

இவர் கடற்​படை​யில் கடந்த 1987-ம் ஆண்டு சேர்ந்​தார். கடற்​படை​யில் சிறந்த பணிக்​காக பரம் விசிஷ்ட் சேவா, அதி விசிஷ்ட் சேவா மற்றும்​ விசிஷ்ட்​ சேவா பதக்​கங்​களை இவர்​ வென்​றுள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>முப்​படை தலைமை தளப​தி ராஜா சுப்பிரமணி</em></p></div>
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in