

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் ஜஹாங்கிர்புராவில் உள்ள டைம்ஸ் கேலக்ஸியில் குடியிருப்பவர் நிதின்பாய் ஆதியா (57). 10-வது மாடியில் வசிக்கும் இவர் கடந்த புதன்கிழமை காலை 8 மணியளவில் ஜன்னலுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்த போது நிலை தவறி கீழே விழுந்துவிட்டார்.
ஆனால், அவரது கால் 8-வது மாடி கிரில் கம்பியில் சிக்கியதால் தலைகீழாக தொங்கி வலியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கயிறு கட்டி ஆதியாவை மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.