முஸ்லிமாக மதம் மாறியவர்கள் பி.சி. இடஒதுக்கீட்டை பெற முடியாது: உச்ச நீதிமன்றம்

முஸ்லிமாக மதம் மாறியவர்கள் பி.சி. இடஒதுக்கீட்டை பெற முடியாது: உச்ச நீதிமன்றம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் கொள்கையை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாத்துக்கு மதம் மாறிய 7 முஸ்லிம் பிரிவினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - முஸ்லிம்கள் (Backward Class Muslims) என்று அங்கீகரித்து, அவர்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கியது. தமிழக அரசின் இந்த முடிவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று (வியாழக்கிழமை) தனது தீர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “இந்து சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்துக்கு மதம் மாறுவதால் அவர் தானாகவே இஸ்லாமிய சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம்பெற முடியாது.

தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவு, இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெறுவதற்காக ஒரு செயற்கையான பிரிவினரை உருவாக்குவதாக உள்ளது. ஒரு சமூகத்தைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்து அவர்களுக்குச் சலுகைகள் வழங்குவதற்கு முன்பாக சட்டப்பூர்வமான சமூக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்து சமூக அமைப்பில் இருந்து இந்து அல்லாத சமூக அமைப்புக்கு மதம் மாறிய ஒருவர், இத்தகைய இடஒதுக்கீட்டுச் சலுகையைக் கோர முடியாது.” என தீர்ப்பளித்தனர்.

முஸ்லிமாக மதம் மாறியவர்கள் பி.சி. இடஒதுக்கீட்டை பெற முடியாது: உச்ச நீதிமன்றம்
“முதல்வர் விஜய் மளிகைக் கடைகளுக்கு சென்று விலைவாசியை கேட்டறிய வேண்டும்” - மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in