குருத்வாராவுக்குள் நுழைய மறுத்த ராணுவ அதிகாரி: பணிநீக்கத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

குருத்வாராவுக்குள் நுழைய மறுத்த ராணுவ அதிகாரி: பணிநீக்கத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: குருத்​வா​ரா​வுக்​குள் நுழைய மறுத்த ராணுவ அதி​காரியை பணிநீக்​கம் செய்​யும் ராணுவத்​தின் முடிவை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ளது.

ராணுவத்​தில் மத அணிவகுப்பு என்ற நடை​முறை உள்​ளது. இதில் அனைத்து வீரர்​களும் 'சர்வ தர்ம ஸ்தல்' என்ற அனைத்து மத வழி​பாட்​டுத் தலத்​திற்கு ஒவ்​வொரு வார​மும் சென்று பிரார்த்​தனை செய்​கின்​றனர். இந்​நிலை​யில் பஞ்​சாபில் சீக்​கிய வீரர்​களை கொண்ட ஒரு படைப் பிரிவுக்கு கிறிஸ்​தவ​ரான சாமுவேல் கமலேசன் என்​பவர் அதி​காரி​யாக இருந்​தார். இவரது படைப்​பிரி​வில் அனைத்து மத வழி​பாட்​டுத் தலம் இல்​லை. ஒரு குருத்​வாரா, கோயில் இருந்​தது.

இதனால் கமலேசன் தனது படை வீரர்​களு​டன் மத அணிவகுப்புக்கு செல்​லும்​போது குருத்​வாரா உள்ளே செல்​வ​தில்​லை. வெளி​யில் நின்று மட்​டும் மரி​யாதை செலுத்​து​வார்.

இவர், குருத்​வாரா உள்ளே செல்​லாதது, அதன் சடங்​கு​களில் பங்​கேற்​காதது அவரது படைப்​பிரி​வின் ஒற்​றுமை மற்​றும் ஒழுக்​கத்தை பாதிக்​கும் என்று அவரது அதி​காரி​கள் கூறிய​போதும் கமலேசன் அதை ஏற்​க​வில்​லை. அது தனது மத நம்​பிக்​கைக்கு எதி​ரானது என வாதிட்டு வந்​தார். கமலேசன் தொடர்ந்து ஆலோ​சனை​கள், எச்​சரிக்​கைகளை புறக்​கணித்​த​தால் அவர் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டார். இதற்கு எதி​ரான அவரது மனுவை டெல்லி உயர் நீதி​மன்​றம் நிராகரித்​தது.

இதையடுத்து உச்ச நீதி​மன்​றத்​தில் கமலேசன் மேல்​முறை​யீடு செய்​தார். அவரது மனு புதிய தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது தலைமை நீதிப​தி, “சா​முவேல் சிறந்த அதி​காரி​யாக இருக்​கலாம். ஆனால் ராணுவத்​துக்கு பொருத்​தமற்​றவர். ராணுவத்​துக்கு அதிக பொறுப்​பு​கள் இருக்​கும் இத்​தருணத்​தில் இதை நாங்​கள் அனு​ம​திக்க விரும்​ப​வில்​லை. இது ஒரு ராணுவ அதி​காரி​யின் முற்​றி​லும் ஒழுங்​கீன​மான செயல். இது​போன்று சண்​டை​யிடும் நபர்​கள் ராணுவத்​தில் இருக்க தகு​தி​யானவர்​களா?” என்​று கூறி ராணுவத்தின் முடிவை உறுதி செய்தார்.

குருத்வாராவுக்குள் நுழைய மறுத்த ராணுவ அதிகாரி: பணிநீக்கத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி நிறைவு: கோபுரத்தில் காவிக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in