தீபாவளி: டெல்லியில் 2 நாட்கள் பசுமைப் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

தீபாவளி: டெல்லியில் 2 நாட்கள் பசுமைப் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
Updated on: 
1 min read

புதுடெல்லி: டெல்லி மற்​றும் தேசிய தலைநகர் பகுதி​களில் தீபாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு, இரண்டு நாட்களுக்கு பசுமைப் பட்​டாசுகளை வெடிக்க உச்ச நீதி​மன்​றம் அனுமதி வழங்கி​யுள்​ளது.

டெல்லி மற்​றும் தலைநகர வலை​யப் (என்​சிஆர்) பகுதி​களில் காற்று மாசுபாட்​டைக் கட்​டுப்​படுத்​தும் வகை​யில், பட்​டாசுகளைத் தயாரிக்​கவும், விற்​பனை செய்​ய​வும், வெடிக்​கவும் தடை விதிக்கப்பட்​டுள்​ளது. இத்​தடையைத் தளர்த்​தக் கோரி, பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் விற்​பனையாளர்​கள் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டிருந்​தது. நீதிப​தி​கள் எம்.எம். சுந்​தரேஷ், பிரசன்னா பி.வராலே அமர்வு தற்​போது உத்​தரவு பிறப்பித்​துள்​ளது.

அதில், தீபாவளியை முன்​னிட்டு நவ.7, 8 ஆகிய தேதி​களில் மட்டும், சிஎஸ்ஐஆர் (CSIR), நீரி (NEERI) அமைப்​பு​களால் அங்கீகரிக்கப்​பட்ட பசுமைப் பட்​டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்

​படி, நவ.7-ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், நவ. 8-ம் தேதிகாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பசுமை பட்​டாசுகளை வெடிக்​கலாம்.

மேலும், நவம்​பர் 4 முதல் 6-ம் தேதி வரை அங்​கீகரிக்​கப்​பட்ட பசுமைப் பட்​டாசுகளை விற்​பனை செய்ய நீதிப​தி​கள் அனுமதி வழங்​கி​யுள்​ளனர். மருத்​து​வ​மனைகள், கல்வி நிறு​வனங்​கள், முதியோர் இல்​லங்​கள் உள்​ளிட்ட இடங்​களி​லிருந்து 300 மீட்​டர் சுற்றளவுக்​குள் பட்​டாசுகளை வெடிக்க தடை விதித்​துள்​ளனர். ஆன்​லைன் மூலம் பட்​டாசுகளை விற்​பனை செய்ய அனுமதி மறுத்துள்​ளனர்.

அதேநேரம் அங்​கீகரிக்​கப்​படாத பசுமைப் பட்​டாசுகள், பேரியம் கலந்த பட்​டாசுகள், சரவெடிகள் ஆகிய​வற்றை விற்​பனை செய்ய தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தத் தற்​காலிகத் தளர்வு நவ.8-ம் தேதி​யுடன் முடிவடையும் என்றும், நவ.9-ம் தேதி முதல் டெல்லி மற்றும் என்​சிஆர் பகுதி​யில் பட்​டாசுகளுக்​கான முழுத் தடை மீண்டும் அமலுக்கு வரும் என்​றும் நீதிப​தி​கள் தங்​கள் உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளனர்.

தீபாவளி: டெல்லியில் 2 நாட்கள் பசுமைப் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
அரசியல் விமர்சனங்களுக்காக கைது செய்வது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல: சென்னை உயர் நீதிமன்றம்

X