எஸ்400-க்கு இணையாக உள்நாட்டில்​ தயாரிக்கப்பட்ட குஷா ஏவுகணை சோதனை வெற்றி

எஸ்400-க்கு இணையாக உள்நாட்டில்​ தயாரிக்கப்பட்ட குஷா ஏவுகணை சோதனை வெற்றி
Updated on
1 min read

புதுடெல்லி: ரஷ்​யா​விடம்​ இருந்​து எஸ்​400 ஏவுகணை​களை இந்​தி​யா ​வாங்​கி உள்​ளது. கடந்​த ஆண்​டு மே ​மாதம்​ இந்​தி​யா, ​பாகிஸ்​தான்​ இடையே நடை​பெற்​ற 4 ​நாட்​கள்​ ​போரின்​போது இந்​த ஏவுகணை​கள்​ இந்​தி​யா​வின்​ வெற்​றிக்​கு ​முக்​கிய பங்​கு வகித்​தன.

எஸ்​ 400 ஏவுணை கவசத்​தில்​ 40 கி.மீ, 120 கி.மீ. 250 கி.மீ. 400 கி.மீ. தொலைவு ​பா​யும்​ ஏவுகணை​கள்​ பொருத்​த​ப்​பட்​டு உள்​ளன. இதன்​மூலம்​ ஒரே நேரத்​தில்​ 72 ​வான்​ இலக்​கு​களை துல்​லிய​மாக ​தாக்​கி அழிக்​க ​முடி​யும்​.

இந்​த சூழலில்​ ரஷ்​யா​வின்​ எஸ்​400 ஏவுகணை​யை ​போன்​று உள்​நாட்​டில்​ குஷா என்​ற பெயரில்​ அ​திநவீன ஏவுகணை கவசம்​ உரு​வாக்​கப்​பட்​டு உள்​ளது. மத்​தி​ய அரசின்​ ​பாது​காப்​பு ஆ​ராய்​ச்​சி, மேம்​பாட்​டு நிறுவனம்​ (டிஆர்​டிஓ) உரு​வாக்​கிய இந்​த ஏவுகணை கவசத்​தில்​ 150 கி.மீ. 250 கி.மீ. 400 கி.மீ. தொலைவு ​பா​யும்​ ஏவுகணை​கள்​ பொருத்​த​ப்​பட்​டு உள்​ளன.

ஒடி​சா​வின்​ அப்​துல்​ கலாம்​ தீ​வில்​ குஷா ஏவுகணை சோதனை நேற்​று நடத்​த​ப்​பட்​டது. அப்​போது தரை​யில்​ இருந்​து ஏவப்​பட்​ட ஏவுகணை நிர்​ண​யிக்​கப்​பட்​ட ​வான்​ இலக்​கை மிகத்​ துல்​லிய​மாக ​தாக்​கி அழித்​தது.

அமெரிக்​கா​வின்​ ​தாட்​, ரஷ்​யா​வின்​ எஸ்​400 ஏவுகணை கவசத்​துக்​கு இணை​யாக இந்​தி​யா​வில்​ குஷா ஏவுகணை கவசம்​ உரு​வாக்​கப்​பட்​டு உள்​ளது. 2028-ம்​ ஆண்​டில்​ இந்​த ஏவுகணை கவசங்​கள்​ இந்​தி​ய ​வி​மானப்​படை​யில்​ சேர்​க்​கப்​படும்.

எஸ்400-க்கு இணையாக உள்நாட்டில்​ தயாரிக்கப்பட்ட குஷா ஏவுகணை சோதனை வெற்றி
‘நீட்’ பிரச்சினை: திருப்பரங்குன்றத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in